உடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த பதிலடி.

0
3167
abhirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. தமிழில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. இந்த சீசன் மூலம் கொஞ்சம் சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அபிராமி. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம்.

-விளம்பரம்-

இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி அவர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி -கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவர் அஜித்துடன் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் அமைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் கூட கமிட் ஆகி இருந்தார் அபிராமி. ஆனால், ஒரு படம் கூட இன்னும் வெளியாக வில்லை. அதே போல இந்த லாக் டவுன் நேரத்தில் அபிராமி அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதே போல தனது பிட்னஸ்ஸில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்த அபிராமி லாக்டவுன் சமயத்தில் சற்று உடல் எடை கூடிவிட்டார்.

இதனால் இவரை பலரும் கேலி செய்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது புகைப்பத்திற்கு கீழ் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நான் என்ன சைஸ் இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டாம். நான் எப்போது சிரிக்க வேண்டும் சிரிக்க கூடாது என்பதை சொல்ல வேண்டாம் மற்றும் குறிப்பாக நான் என்ன உடுத்த வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டாம். அது யாராக இருந்தாலும் சரி, நான் யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய பிறக்கவில்லை. ஆம், நான் நடிகைதான் ஆனால் ‘வெறும் நடிகை’ கிடையாது என்று

-விளம்பரம்-
Advertisement