‘பிளாஸ்டிக் சார்ஜரி பண்ணா என்ன மக்களுக்கே புடிக்குமோ’ – பிரியங்காவிடம் சொன்னது குறித்து மனம் திறந்த அபிஷேக்.

0
469
abhishek
- Advertisement -

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களை விட மக்களுக்கு தெரியாத முகங்கள் தான் அதிகம் கலந்து இருந்தார்கள். அந்த வகையில் மக்களுக்கு பரிச்சயமானவர் யூடியூப் பிரபலம் அபிஷேக் ராஜா. இவர் யூடியூபில் விமர்சனம் செய்ததன் மூலம் பல பேரிடம் மொக்கை வாங்கி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பொதுவாகவே பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் வெறுப்பை சம்பாதிப்பார்கள்.

-விளம்பரம்-
🔴UNSEEN :அசிங்கபட்டான் Abhishek Raja - VJ Priyanka Trolls | Bigg Boss 5  Tamil | Vijay Tv | Day 8 - YouTube

ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு தான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருக்கிறார். அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனாலே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்ட் என்றி மூலம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் நுழைந்து இருந்தார். மீண்டும் மாறாமல் அதே திமிரு, அடாவடித்தனம், அடித்து பேசுவது என்று பிரியங்காவுடன் தேவையில்லாமல் வேலைகளை செய்து கடந்த வாரம் நடந்த எழிமினேஷனில் அபிஷேக் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸே நேரடியாக செய்த நாமினேஷன் – யார் யாரை தெரியுமா ? வார இறுதியில் காத்திருக்கும் செம ட்விஸ்ட்.

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயங்களை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, இந்த நிகழ்ச்சியில் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் பொதுமக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. நானும் மனிதன் தான். எனக்கும் வலி வேதனை எல்லாம் இருக்கு. தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள். அபிஷேக் எது பண்ணாலும் தப்பு என்று ஒரு பக்கம் மக்களால் பார்க்கப்படுவதால் தான் இந்த பிரச்சனை. ஆனால், இது உண்மை கிடையாது. நான் ப்ரியங்காவிடம் சொன்னேன், ஒருவேளை நம்ம பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூஞ்சை மாற்றினால் மக்களுக்கு பிடிக்குமா?

வீடியோவில் 15 : 23 நிமிடத்தில் பார்க்கவும்

நான் தான் வெளியே போக போறேன் என்று தெரியுது. அப்படி இல்லை என்றால் அடுத்த வாரம் வரும் எல்லா டாஸ்க்கிலும் உன்னை வெளுத்து வாங்கி தாறுமாறா கிழிப்பேன் என்று சொல்லி இருந்தேன். அது எல்லோம் டிவியில் வரவில்லை. அது மட்டும் வந்து இருந்தால் மக்கள் மத்தியில் என் இமேஜ் வேற மாதிரி இருந்து இருக்கும். எங்க இரெண்டு பேரையும் வேற வேற டீமில் போட மாட்டுகிறார்கள். பொதுவாகவே டாஸ்கின் மூலம் வரும் வார்த்தைகளை வைத்து தான் எவிக்ட் பண்ணுகிறார்கள். அதனால் தான் என்னைப் பற்றி தவறான புரிதல் மக்களுக்கு வருகிறது. மக்களுக்கு பிடித்த மாதிரி எப்படி இருக்கணும்? என்று எனக்கு தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு சொல்வது ஒன்று தான், இந்த அபிஷேக்கை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் பிளீஸ் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement