‘100 நாள்ல Cm ஆகனும்னு நீ பண்ற வேல இருக்கே, முடியலடா’ – அபிஷேக் ராஜாவின் பழைய வீடியோவால் கடுப்பான கமல் ரசிகர்கள்.

0
1736
abhishek
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

அந்த வகையில் யூடுயூப் விமர்சகரான அபிஷேக் ராஜாவையும் நெட்டிசன்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் ருக்க முடியாது. அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

இதையும் பாருங்க : அண்ணாத்த பாடலை ஓராண்டிற்கு முன்பே பாடிய ரஜினி ரசிகர் – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

இந்த நிலையில் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், கமல் குறித்தும் வாய்க்கு வந்தபடி பேசிய பழைய வீடியோவை நெட்டிசன்கள் தேடி எடுத்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில், ஊருக்கே தெரியும் உங்கள கேமரா வச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்கனு, ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு CM ஆகணும்னு நீ பண்ற வேலை இருக்கே முடியலடா என்று பேசி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே, விஜய் சேதுபதியுடன் இணைந்து கமலை பேட்டி எடுத்தார். அந்த வீடியோவிலும் இவரின் அதிகபிரசங்கிதனத்தை பார்த்து கழுவி ஊற்றினர். பிக் பாஸில் கலந்துகொண்ட போது கூட கமலை பார்த்ததும் பயங்கரமாக பம்மினார். ஆனால், இந்த வீடியோவை பார்த்து கமல் ரசிகர்கள் பலரும் அபிஷேக்கை கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement