ஒரு போஸ்டுக்கு 30, ஒரு ஸ்டோரரிக்கு 40ஆயிரம், ஒரு நிமிட விடீயோவிற்கு எவ்ளோ தெரியமா ? தர்ஷா குறித்து ஆதாரத்தை வெளியிட்ட

0
17596
darsha
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு சிலர் தர்ஷா குப்தாவை திட்டி தீர்த்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தர்ஷா குப்தா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சினிமா நடிகைகளை விட சின்னத் திரை நடிகைகள் தான் ப்ரோமோஷன் என்ற பெயரில் சில பொருட்களை விளம்பரம் செய்து அதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணத்தை சம்பாதிக்கின்றனர்.

-விளம்பரம்-

ஒரு போஸ்டுக்கு இவ்வளவு ஒரு ஸ்டோரி இவ்வளவு இன்ஸ்டாவில் அந்த பொருட்கள் குறித்து வீடியோ போட இவ்வளவு என்று கணக்கிட்டு சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை பெறுகின்றனர். எந்த அளவிற்கும் போலோவர்ஸ் வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்த ப்ரோமோஷனுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தான் பொருட்களை விளம்பரம் செய்து தருவதாக கூறி இலவசமாக பொருட்களை வாங்கிவிட்டும் பல ஆயிரம் பணத்தை பெற்றுவிட்டும் அதற்கான போஸ்டை போடாமல் தர்ஷா ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

- Advertisement -

இதுகுறித்து வீடியோ வெளியிட்ட தர்ஷா, நான் யாருடைய பணத்தையும் ஏமாற்றவில்லை, எனனிடம் சிலர் தங்களுடைய புடவை, கம்மல் போன்றவற்றை விளம்பரம் செய்ய சொல்லி கேட்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் நேரத்தில் என்னால் ப்ரோமோஷன் வீடியோ போட முடியாது என்பதால் நான் என் விருப்பத்திற்கு தான் வீடியோ போடுவேன். அதனால் நான் பணம் வாங்காமல் இலவசமாக தான் செய்து கொடுத்தேன். உண்மை தெரியாமல் யாரை அசிங்கமாக பேச வேண்டாம் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-42.jpg

இப்படி ஒரு நிலையில் தர்ஷா குத்பா உட்பட விஜய் டிவி சீரியல் நடிகைகளான பவித்ரா, காவ்யா, சான்ட்ரா, ஆல்யா மானஸா என்று பல பிரபலமான நடிகைகள் சிறு தொழில் முனைவோரிடம் பொருட்களை விளம்பரம் செய்து தருவதாக பணத்தை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த பொருட்கள் குறித்து ப்ரொமோஷன் செய்யாமல் இருந்துள்ளனர் என்று சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். மேலும், தர்ஷா குப்தாவின் மேனேஜர் அனுப்பிய மெசேஜ் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-14.png

அதில் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டுக்கு 30ஆயிரமும், போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்கு 40 ஆயிரமும் ஒரு நிமிடம் வீடியோ போட 50 ஆயிரமும் தர்ஷா குத்பா வாங்குவதாக ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை தொடர்ந்து பல பிரபலங்களும் ப்ரோமோஷன் செய்வதர்க்காக பல மாதங்களுக்கு முன் வாங்கிய பணங்களை திருப்பி கொடுத்துள்ளனர். இதுவரை பிராண்டுகளுக்கு 4,50,000 ரூபாய் அப்படித் திருப்பித் தரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement