அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா? னு சொன்னால் – ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த ஷாக்.

0
8096
james
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபபராகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்கு என்றும் பஞ்சம் இருந்தது இல்லை, அதில் ஒன்று தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மோக்கிங் ரூம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சிகிரெட் பாக்கெட் பாக்கெட்டகாக கொடுக்கப்படும். போட்டியாளர்கள் புகை பிடிப்பதை காட்டவில்லை என்றாலும் அந்த புகை பிடிக்கும் அறைக்குள் எக்கச்சக்க சிகரெட் டப்பாக்கள் இருந்ததை நாமே பலமுறை பார்த்திருக்கிறோம்.

-விளம்பரம்-
Bigg Boss 2 Tamil - Smoking Room Atrocities | Yashika | Aishwarya Dutta -  YouTube

இப்படி ஒரு நிலையில் ஜேம்ஸ் வசந்தன் பிக் பாஸ் நிகழ்ச்சியால் இளம் நடிகைக்கு ஏற்பட்டுள்ள புகை பிடிக்கும் பழக்கம் பற்ற ஷாக்கிங் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம்பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள்.

- Advertisement -

அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, “தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்க்கம் போயி.. ” என்று கையில் இருந்த சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.நான் “ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.. feel free” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் “Soooooory..” என்று நெளிந்தாள். “எதுக்கு?” என்றேன். “உங்களுக்கு ஷாக்தானே?”

“Shock இல்ல.. bit surprised. Didn’t know that you smoke” என்றேன்.”எல்லாம் இந்த Bigg Boss-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா?” என்றாள்.”அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டேன்.”ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும்””இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல?””நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது” என்றாள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement