விஜய் டிவியில் ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மக்களுக்கு அபிமான போட்டியாளர்கள் இருக்கின்றகினறோ இல்லயோ, சர்ச்சைக்குரிய போட்டியாளர்களுக்கு மட்டும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. அந்த வகையில் திரைப்பட நடிகையான ஐஸ்வர்யாவும் ஒருவர்.
தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுதவும்’ என்ற படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம்’ போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பொதுவான நடிகர்களை விட நடிகைகள் தான் நடிப்பையும் தாண்டி வேறு எதாவது ஒரு தொழிலை செய்து வருவாரர்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா துபாயில் சொந்தமாக ஒரு ‘Manpower Consultancy’ நிறுவனம் ஒன்றை நிறுவி வருகிறார். இந்த நிறுவனத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தில் துபாயில் வேலை தேடி வரும் நபர்களுக்கு பல நிறுவனங்களின் வேலை வாங்கி தரும் நிறுவனத்தை தான் நடிகை ஐஸ்வர்யா நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக தனது குடும்பத்தை பிரிந்து சென்னையில் தனியாக வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தான் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று எண்ணி சொந்தமாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறாரோ என்று எண்ணம் தோன்றுகிறது.