பிக் பாஸ் கலாச்சார சீரழிவு..! நிகழ்ச்சியை யாரும் பார்க்காதீங்க.! ஆனந்த் வைத்தியநாதன் அதிரடி

0
584

பிக் பாஸ் 2 நிகழ்ச்சின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நித்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பாதி விடயங்களை காண்பிப்பதே இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை பற்றி அனந்த் வைத்தியநாதன் மனம் திறந்துள்ளார்.

Anand vaithiyanathan

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததும் ரசிகர்களுக்கு சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரால் இரண்டு வாரங்கள் கூட தாக்கு பிடிக்கமுடிவில்லை. எனவே, மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கே சென்று விடுங்கள் என்று மக்கள் வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அனந்த் வைத்தியநாதனிடம் ‘பிக் பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என பலர் கூறுகிறார்கள். அதை பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.

AnanthVaidyanathan

இதற்கு பதிலளித்த அனந்த் வைத்தியநாத “கலாச்சார சீரழிவாக உங்களுக்கு தெரிந்தால் அந்த நிகழ்ச்சியை பார்க்காதீர்கள் .நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை.பிக் பாஸ் வீட்டில் தான் மனதளவிலும் உடலளவிலும் தான் மிகவும் கஷ்டப்பட்டேன் ” என்று கூறியுள்ளார்.