இந்த நடிகரை நேரில் பார்த்தால் அழுதுருவேன்.! ‘அழகு’ சீரியல் ஸ்ருதி.! யார் தெரியுமா ..?

0
602
Sruthi

சன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் `அழகு’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார், நடிகை ரேவதி. அவருக்கு மகளாக நடிக்கிறார், ஸ்ருதி. `தென்றல்’ சீரியல் மூலமாக துளசி என்ற பெயரில் பிரபலமானவர். தற்போது சுதாவாகப் பலரின் மனதிலும் நெகட்டிவ் கதாபாத்திரமாகப் பதிந்திருக்கிறார். அவரிடம் பேசியபோது.

shruthi

தென்றல்’ சீரியலில் நடித்தவர்களோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கிறீர்களா?

“ஆமாம். அந்த டீமை மறக்க முடியுமா?. என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்த சீரியல் இது. இந்த சீரியலின் இயக்குநர் குமரன் சாருடைய `நாயகி’ சீரியல் இப்போ போயிட்டு இருக்கு. ஷூட்டிங் எங்கே நடந்தாலும், அங்கே போய் டீமை சந்திச்சி ஒரு ஹாய் சொல்லிட்டுத்தான் வருவேன். `தென்றல்’ சீரியல் வந்தப்போ, இப்போ இருக்கிற மாதிரி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல ஆக்டிவாக இல்லாமல் இருந்தோம். வாட்ஸ்அப் குரூப்ல பேசுவதெல்லாம் கிடையாது. சமீபத்துலதான், எல்லோரும் ஒன்றாகப் பேச ஆரம்பிச்சிருக்கோம்.

நீங்க வாழ்க்கையில ஒரு முறையாவது பார்க்க நினைக்கும் நபர்?

வாழ்க்கையில நான் பார்க்கணும்னு நினைச்ச ஒரே ஆள், ஷாரூக் கான். அவருக்கு ஒருவாட்டி ஷேக் ஹேண்ட் கொடுக்கணும். என் பெரிய கனவே அதுதான். அவரைப் பார்த்தா கண்டிப்பாகப் பேச்சு வராது.

sharuk family

ஒண்ணு, கண் கலங்கிடும். இல்லைனா, அப்படியே பிரமிச்சுப் போய் நின்னுடுவேன். மத்தபடி, தமிழ் நடிகர்களில், ரஜினி சாரைப் பார்த்துட்டேன். கமல், விஜய், அஜித் எல்லோரையும் பார்த்தாச்சு. வெயிட்டிங்கில் இருப்பது ஷாரூக் மட்டும்தான்!.”