பிக் பாஸ் மற்றும் ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பில் திடீர் மாற்றம் – ஏன் தெரியுமா ?

0
3492
kamal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற தவறி வருகிறது.

-விளம்பரம்-
Raja Rani (TV series) - Wikipedia

இதனால் இந்த சீரியலில் எக்கச்சக்க மாற்றங்களை செய்து வருகிறது தொலைக்காட்சி குழு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி களில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் டிஆர்பியை ஓரளவிற்கு இழுத்து பிடித்துக் கொண்டு வருகிறது இந்த நிகழ்ச்சியும் இன்னும் ஒருசில தினங்களில் நிறைவடைய இருக்கிறது இப்படி ஒரு நிலையில் நாளை முதல் ராஜா ராணி தொடர் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவரும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

இதையும் பாருங்க : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவர் பண்ண விஷ்யத்த பாத்து ச்சீனு ஆகிடிச்சி. ஆரி குறித்து முன்னாள் போட்டியாளர்.

- Advertisement -

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணமே விஜய் தொலைக்காட்சியில் நாளை முதல் துவங்க இருக்கும் புதிய சீரியல் தான் காரணம். கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

kamal

இருப்பினும் அடுத்தடுத்து புதிய சீரியல்களை விஜய் டிவி துவங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக விஜய் டிவியில் ‘யாருப்பா அந்த பாவம் கணேசன்’ என்ற ஒரு புதிய ப்ரோமோவை ஒளிபரப்பி வருகிறது.இந்த சீரியலில் KPY நவீன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமான நவீன், அதன் பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். விரைவில் இவரை ‘பாவம் கணேசன்’ சீரியலில் ஹீரோவாக பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement