கொஞ்சம் ஆணவத்துடன் நடமாடத் தொடங்கியிருக்கிறார் அனிதா – ஜேம்ஸ் வசந்தன் போட்ட நீளமான பதிவு.

0
7915
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பலர் இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத்தும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்தது. பிக்பாஸில் அனிதாவை பார்த்த பலரும் அட இவங்க மிகவும் ஸ்வீட்டான பொண்ணுங்க என்று நினைத்தார்கள். ஆனால் வந்த ஓரிரு நாட்களிலேயே சுரேஷுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அனிதா சம்பத் ரசிகர்களை கொஞ்சம் அப்செட் அடைய வைத்தார். மேலும், சமீப காலமாக இவரது நடவடிக்கைகளால் பலரும் இவரை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Image may contain: 1 person

தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பின் தொடரியாக இருந்து வருகிறார். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பிக் பாஸ் குறித்தும் அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் குறித்தும் அடிக்கடி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் பதிவுகளுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் அனிதா சம்பத் குறித்து சமீபத்தில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : ஒரே ஒரு சீன் தான் 2 பேரும் வெளியே – அர்ச்சனாவின் ‘சாரிப்பா’வை கலாய்த்த ரசிகர்கள் – அர்ச்சனா கொடுத்த பதிலடி.

- Advertisement -

அதில்., ஒருசில வாரங்களுக்கு முன்பு Bossy குமாரும், நிஷாவும், மற்ற சிலரும் சேர்ந்து அனிதாவுக்கு செய்த நியாயமற்ற செய்கைகளை வார இறுதியில் கமல் விசாரிக்க, நிஷாவை அவர்களே ஜெயிலுக்கு அனுப்பும் அளவுக்கு விஷயங்கள் நிகழ்ந்தன.அதற்கு காரணமான நிகழ்வுகளை மக்கள் எல்லாரும் பார்த்தார்கள், கொதித்தார்கள் என்பதால் அப்படிச் செய்யவேண்டியதாயிற்று. ஆனால், அந்த விசாரணைக் காட்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, அதிலிருந்து அதிகமாகக் கத்த, கொதிக்க, உயர்நிலை மனப்பான்மையுடன், கொஞ்சம் ஆணவத்துடன் நடமாடத் தொடங்கியிருக்கிறார் அனிதா.

அன்புத்தாய் வெளியேறியவுடன் அந்தப் பதவியைத் தானாக எடுத்துக்கொண்டு அலப்பறை விடுவது இவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் காலிசெய்துவிட்டது. இப்போ மக்கள் குழம்பிப் போயிருக்காங்க. முதலில் ஆஜித்தை அனுப்புவதா, இல்லை அனிதாவையா என்று! நுணலும் தன் வாயால் கெடும் என்று பதிவிட்டுள்ளார் ஏற்கனவே, ஜேம்ஸ் வசந்தன் ஆரி குறித்து தன்னுடைய நீண்ட கருத்தை பதிவிட்டு இருந்தார். அதன் லிங்க் இதோ

-விளம்பரம்-
Advertisement