‘உன் அட்வைஸ் கூந்தல நீயே’ – கமன்ட் செய்த பெண்ணை திட்டி தீர்த்த விஜி, அனிதாவின் கமெண்டை பாருங்க.

0
631
- Advertisement -

தமிழில் சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமானவர விஜயலக்ஷ்மி. மேலும், இவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதே போல சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் விஜயலட்சுமி பங்கேற்றிருந்தார். கடுமையான பல போட்டிகள், சவால்கள் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்ற இந்த நிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மி வெற்றி பெற்று ஒரு கோடியை தட்டிச் சென்றார். விஜயலக்ஷ்மி தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரோஸ் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-76.png

திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். ஒரு குழந்தைக்கு தாயான போதிலும் தற்போதும் fit and cute ஆக இருந்து வரும் விஜய் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடமானடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பெண் ஒருவர் ‘இந்த ஆட்டம் தேவையா ஒரு அம்மாவா இருக்க’ என்று கமன்ட் செய்து இருந்தார்.

- Advertisement -

விஜயலக்ஷ்மி வெளியிட்ட டான்ஸ் வீடியோ :

இதற்கு பதில் அளித்த விஜயலட்சுமி ‘அப்போ அம்மா அண்ணா மூலைல உக்காந்து அழனுமா ? ஐயோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனிமே எல்லாருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன் நான் ஒரு தியாகினு. அத நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க, தியாக செம்மல்னு. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது குழந்தை பெற்ற பல அம்மாக்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவார்கள்.

This image has an empty alt attribute; its file name is 1-408-659x1024.jpg

விமர்சித்த பெண்ணிற்கு விஜியின் பதிலடி :

உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்க டிப்ரஷன்ல இருக்காங்க. மற்றவர்களை எடை போடுவதை நிறுத்துங்கள். நீங்க குடும்ப குத்து விளக்காக இல்லை இதெல்லாம் என்னால பண்ண முடியாதுன்னு ஒரு பொறாமைல கமெண்ட் பண்ணி இருக்கீங்களான்னு தெரியல மேடம் எது எப்படியோ உன் அட்வைஸ் கூந்தலை நீங்களே பின்னி பூ வைத்து கொள்ளவும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

விஜிக்கு ஆதரவு தெரிவித்த அனிதா :

இப்படி ஒரு நிலையில் விஜயலட்சுமியின் இந்த பதிவை பகிர்ந்துள்ள அனிதா ‘அம்மாகளுக்கு மட்டுமல்ல, திருமணமான அணைத்து பெண்களுக்கும் இது பொருந்தும். நமக்கு கிடைக்காத சுதந்திரம் இவங்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்பாது தான் விஷயமே. வருத்தமான விஷயம் என்னவென்றால், இது போன்ற கேள்விகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சிலர் இன்னமும் இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார் அனிதா.

அல்டிமேட்டில் டேமேஜ் ஆன அனிதாவின் பெயர் :

செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதாவிற்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பட்டாளம் கூடியது. இதை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் 4ல் பெண்கள் சுதந்திரம் குறித்தும் பெண் அடிமை குறித்தும் பேசி கமலிடமே பாரட்டை பெற்றார். ஆனால், சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் இவரது பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement