சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மிக்கு அறிமுகம் தேவையில்லை. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மேலும், இந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.மேலும்,போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார்.
மேலும், இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியும் பெற்று வீட்டை தட்டிச் சென்றார். மேலும்,இந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். மேலும், தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல் தெறிக்கவிட்டது என்று சொல்லலாம்.
அதுமட்டும் இல்லாமல் சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாட்டை அதிகம் விரும்பி கேட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இவர்கள் பிரபலமானார்கள். மேலும், இந்த பாட்டினை சார்லி சாப்லின் படத்திலும் பாடி அதுவும் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து கச்சேரிகளும் குவியத் துவங்கியது. அவ்வளவு ஏன் வெளிநாட்டில் கூட கச்சேரிகளை செய்து வந்தனர்.
அதுமட்டுமில்லாமல் செந்தில் கணேஷ் ‘கரிகாலன்’ என்ற படத்தில் கூட ஹீரோவாக நடித்து உள்ளார். செந்தில் கணேஷுக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அவரும் ஒரு பாடகி தான். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செந்தில் கணேஷ் தங்கைக்கு திருமணம் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் 4 போட்டியாளரும் நடிகையுமான அறந்தாங்கி நிஷா நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.