நீங்க ஒரு முஸ்லீம், ஆனா இந்து பையனின் மனைவியா நடிச்சி இருக்கீங்க – முகம் சுழிக்கும் கேள்விக்கு நஸ்ரியா கொடுத்த நச் பதில். வீடியோ இதோ.

0
320
Nazriya
- Advertisement -

டோலிவுட்டில் நேச்சுரல் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நானி. இவர் அட்டா சம்மா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பின் நான் ஈ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நானி. இதனை தொடர்ந்து இவர் தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக நானி நடித்திருந்த படம் ஷியாம் சிங்கா ராய். இந்த படத்தை ராகுல் சன்கிரித்யன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி, சாய் பல்லவி, மடோனா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது நானி அவர்கள் அடடே சுந்தரா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். மேலும், இந்த படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நஸ்ரியா. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.

- Advertisement -

அடடே சுந்தரா படம் பற்றிய தகவல்:

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முதன்முறையாக இவர் தெலுங்கில் கதாநாயகியாக அடடே சுந்தரா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் ரோகிணி, நதியா, அழகம் பெருமாள், ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். விவேக் சாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் மற்றும் நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அடடே சுந்தரா படத்தின் டீசர்:

சமீபத்தில் தான் இந்த படத்திற்கான போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்தநிலையில் தற்போது அடடே சுந்தரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில், நிறைய குடும்ப உறவினர்களை கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் வாரிசு என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகன் நானி நடித்திருக்கிறார். இதன் காரணமாக அவர் மீது அனைவரும் அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் லீலா தாமஸ் என்ற கிறிஸ்துவ வேடத்தில் நஸ்ரியா நடிக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்து நஸ்ரியாவிடம் கேட்ட கேள்வி:

பின் இவர்கள் காதலிக்கிறார்கள். அதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பது தான் கதையின் சுவாரஸ்யமே. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது. அடடே சுந்தரா படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அடடே சுந்தரா படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பத்திரிகையாளர்கள் நஸ்ரியாவிடம் கேட்டது, நீங்கள் முஸ்லிம் பெண்ணாக இருந்து லீலா தாமஸ் என்ற கிறிஸ்துவ வேடத்தில் நடித்து இந்து பையனை திருமணம் செய்கிறார்கள். இதில் நடிப்பதில் எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டிருக்கிறார்கள்.

நஸ்ரியா அளித்த பதில்:

அதற்கு சிறிதும் யோசிக்காமல் நஸ்ரியா உடனடியாக, நான் ஸ்கிரிப்ட்டை விரும்பினேன். அதை விவேக் என்னிடம் தெளிவாக சொன்னார். கதை சொல்லும் போதே எனக்குள் நடிக்கணும் என்ற ஸ்பார்க் வந்தது. நான் லீலா தாமஸ் வேடத்தில் நடிக்க எதையும் செய்யவில்லை. நான் ஸ்கிரிப்ட்டை புரிந்துகொண்டு அதை தான் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படி நஸ்ரியா அளித்திருக்கும் பதில் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் ஜூன் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு தமிழில் நஸ்ரியாவை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement