ஓட்டு போட்ட 19 கோடி பேர் எங்க, கடை திறப்பு விழாவில் அர்ச்சனாவிற்கு கூடிய கூட்டம். கேலி செய்யும் ஹேட்டர்கள்.

0
545
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நிறைவடைந்தது. . மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார்.இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பிக் பாஸ் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் youtuberகளுக்கு எல்லாம் ஒரே குஷி தான். அவர்களை வைத்து பேட்டி எடுக்க வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த உடனே சில வாரங்கள் போட்டியாளர்களுடைய பேட்டி வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரு.ம். இதனால் ரசிகர்களுமே அதை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

- Advertisement -

ஒரு பதிவை கூட போடாத அர்ச்சனா :

அந்த வகையில் போட்டியாளர்கள் பலருமே சோசியல் மீடியாவில் பதிவு போட்டு ரசிகர்களுடன் உரையாடியும் இருக்கிறார்கள்.ஆனால், அர்ச்சனா மட்டும் எந்த ஒரு போஸ்ட் போடவில்லை என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.அதற்கு முக்கிய காரணம் அர்ச்சனாவிற்கும் அவரது Prகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாவும் இதனால் அவர்கள் அர்ச்சனாவின் சமூக வலைத்தளத்தை முடக்கி வைத்து இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

அர்ச்சனாவின் முதல் பதிவு :

மேலும், அர்ச்சனா பல PRகளுக்கு பணம் கொடுத்து தான் இந்த பிக் பாஸ் பட்டத்தையே வென்றார் என்றும் சில குற்றச்சாட்டடுகள் இருந்து வருகிறது. அதனால் தான் அர்ச்சனா சமூக வலைத்தளத்தில் எந்த பதிவையும் போடவில்லை என்றும் கூறி வருகின்றனர். சமீபத்தில் தான் தனக்கு சீரியல் வாய்ப்பு கொடுத்த ராஜா ராணி இயக்குனர் பிரவீன் பென்னட்டை கோப்பையுடன் சென்று நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை பிக் பாஸுக்கு பின் முதல் பதிவாக போட்டிருந்தார் அர்ச்சனா.

-விளம்பரம்-

அர்ச்சனாவின் முதல் லைவ் :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக லைவ் வந்த அர்ச்சனா கூறியதாவது’ சமூக வலைதளத்தில் ஒரு 4 வரிகளை எழுதி உங்களுக்கு நன்றி தெரிவிக்காமல் லைவில் வந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தான் இத்தனை நாட்கள் காத்துகொண்டு இருந்தேன். மேலும், நான் பிக் பாஸில் இருந்த போது அனுபவித்த அழுத்தங்களில் இருந்து வெளிவர எனக்கு கொஞ்சம் நேரம் எடுத்தது என்றும் கூறியுள்ளார்.

கடை திறப்பு விழாவில் அர்ச்சனா :

இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்று இருக்கிறார். பொதுவாக பிரபலங்கள் கடை திறப்பு விழாவிற்கு வந்தாலே கூட்டம் அலை மோதும் ஆனால், டைட்டில் பட்டத்தை வென்ற அர்ச்சனா கடை திறப்பு சென்ற போதிலும் அங்கே மக்கள் கூட்டம் குறைவாக தான் இருந்தனர். இருப்பினும் அங்கே இருந்த சிலர் கடைசியில் அர்ச்சனாவுடன் செல்ஃபீ எடுத்துவிட்டு சென்றனர்.

Advertisement