தம் அடிக்கலாம், அதுக்குன்னு இப்படியா? புகை பழக்கத்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அர்ச்சனா.

0
538
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது 9 வாரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் இதுவரை 7 wild card போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நுழைந்த முதல் செட் Wild Card போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவர் பெரும் பிரபலமானது என்னவோ ராஜா ராணி தொடர் மூலம் தான். இந்த சீரியலில் வில்லியாக மிரட்டிய இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்கள் அழு மூஞ்சாக தான் இருந்தார்.

- Advertisement -

அதிலும், இவர் உள்ளே சென்ற ஒரு சில நாளிலேயே இவரை மாயா & கோ டார்கட் செய்து Bully செய்து வந்தனர். ஆரம்பத்தில் அவர்களின் கேலிகளுக்கு அழுத அர்ச்சனா, பின்னர் அவர்களுக்கு பதிலடி கொடுத்து ஓட வைத்தார். இதனால் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியது . மேலும், வார இறுதியில் இவருக்கு வரும் கைத்தட்டல்களை பார்த்து தான் செல்லும் பாதை சரி என்று புரிந்துகொண்டு விளையாடி வருகிறார் அர்ச்சனா.

ஆனால், இவருக்கு ஆதரவு இருந்து வரும் அதே வேளையில் சில விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதில் மிக முக்கியமாக இவரது புகைபிடிக்கும் பழக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இதில் ஆண்கள் அடிக்கடி செல்வதை விட பெண்கள் தான் அடிக்கடி சென்று வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக அர்ச்சனா தான் அடிக்கடி இந்த அறைக்குள் அடிக்கடி சென்று வருகிறார். இவர் செல்வது ,மட்டுமல்லாமல் மற்றவர்களையும் துணைக்கு அழைத்து செல்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் கேமரா இருப்பது தெரியாமல் சிகெரெட்டை எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பலர் தம் அடிப்பது தனிப்பட்ட விருப்பம் தான் அதற்காக இப்படியா ஒரு பப்லிக் ஷோவில் அப்பட்டமாக எடுத்து செல்வது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு டாஸ்கின் போது விஷ்ணு, பூர்ணிமா, அர்ச்சனா ஆகிய மூவரும் ஒரே கயிற்றில் கட்டிப்போட பட்டனர். அப்போது அர்ச்சனா புகைபிடிக்கும் அறைக்கு சென்று புகைபிடித்துள்ளார். இதுகுறித்து பேசிய விஷ்ணு ‘அர்ச்சனா புகைப்பிடிப்பதால் தன்னுடைய ஆரோக்யம் பாதிக்கப்படுகிறது என்று கமல் சாரிடம் செவ்ல்லப்போவதாக விஷ்ணு கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement