யார் தலைமறைவா இருக்கிறது – கோப்பையுடன் வந்த அர்ச்சனாவிற்கு கிடைத்த வரவேற்பு. வீடியோ இதோ.

0
296
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை கோலாகலமாக வெற்றிகரமாக முடிந்துஇருந்தது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. ஞாயிறு மாலை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 7

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பிக் பாஸ் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் youtuberகளுக்கு எல்லாம் ஒரே குஷி தான். அவர்களை வைத்து பேட்டி எடுக்க வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த உடனே சில வாரங்கள் போட்டியாளர்களுடைய பேட்டி வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரு.ம். இதனால் ரசிகர்களுமே அதை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஒரு பதிவை கூட போடாத அர்ச்சனா :

அந்த வகையில் போட்டியாளர்கள் பலருமே சோசியல் மீடியாவில் பதிவு போட்டு ரசிகர்களுடன் உரையாடியும் இருக்கிறார்கள்.ஆனால், அர்ச்சனா மட்டும் எந்த ஒரு போஸ்ட் போடவில்லை என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.அதற்கு முக்கிய காரணம் அர்ச்சனாவிற்கும் அவரது Prகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாவும் இதனால் அவர்கள் அர்ச்சனாவின் சமூக வலைத்தளத்தை முடக்கி வைத்து இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

அர்ச்சனாவிற்கு கிடைத்த வரவேற்பு :

மேலும், அர்ச்சனா பல PRகளுக்கு பணம் கொடுத்து தான் இந்த பிக் பாஸ் பட்டத்தையே வென்றார் என்றும் சில குற்றச்சாட்டடுகள் இருந்து வருகிறது. அதனால் தான் அர்ச்சனா சமூக வலைத்தளத்தில் எந்த பதிவையும் போடவில்லை என்றும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின்னர் அர்ச்சனாவிற்கு கோலாகலமாக வரவேற்பை கொடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement