கே டி ராகவன் உங்கள் அவானு பொங்காம இருக்கீங்களா – கருஞ்ச்சட்டை கேள்வியால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
1788
lak
- Advertisement -

தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவனின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தெரிவித்து இருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன் தன்னுடைய மதன் டைரி என்ற யூடுப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும், அண்ணாமலை சொன்ன பின்னர் தான் அந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று  பாருங்கள் என்று கூறி சில ஷாக்கிங் ஆதாரங்களை காண்பித்துள்ளார் மதன்.

- Advertisement -

மேலும், அண்ணாமலை சொல்லித்தான் இந்த வீடியோவை தான் வெளியிட்டதாக கூறினார், ஆனால், அண்ணாமலையே, ராகவன் தொடர்பாக மதன் என்னை நேரில் சந்தித்தது உண்மை தான் என்றும் முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் `செய்து கொள்ளுங்கள்’ என்று சுருக்கமாக முடித்து விட்டேன் என்று கூறி இருந்தார்.

ஆனால், நேற்று மீண்டும் வீடியோ வெளியிட்ட மதன் அண்ணாமலை தான் அந்த வீடியோவை வெளியிட சொன்னார் என்ற ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார். Kt ராகவனின் இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பல விவாதங்கள் சென்று கொண்டு இருக்கும் நிலையில், Karunchattai Padai 2.0 என்ற யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடபட்டுள்ளது.

இதையும் பாருங்க : ஒரே நேரத்தில் ஒரே வயிற்றில் பிறந்த இரட்டை பிறவிகள் – தன் பிறந்தநாளில் சூரி கொடுத்த சர்ப்ரைஸ்.

-விளம்பரம்-

அதில் கருப்பர் கூட்ட விவகாரத்தில் பொங்கிய காயத்ரி, இந்த விவாகரத்திற்கு ஏன் பொங்கவில்லை. பல இந்து பெண்கள் தான் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறு செய்தவர் உங்கள் இனம் (பிராமணர்) என்பதால் நீங்கள் எதுவும் கேட்க மாடீர்களா என்று கேட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவில் காயத்ரி மாமி இப்போ பேசுங்க என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், இந்துப் பெண்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் ? யாராக இருந்தாலும் கே.டி ராகவன் செய்தது மிகப்பெரிய தவறுதான். இது போன்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் சாதி அரசியல்களால் தான் எனக்கு குரல் எழுப்புவதற்கு கூட தயக்கமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement