இந்த ஒன்னு தான் ரஹ்மான் போட்ட பக்தி பாடல்னு இருந்துச்சி, கடைசில அதுவும் பொய்யா – ஜி.வி.பிரகாஷ் சொன்ன உண்மை.

0
405
- Advertisement -

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் . கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார். இப்படி ஏ ஆர் ரகுமான் பல மொழிகளில் பலவிதமான பாடல்களை பாடி இருந்தாலும் பக்தி பாடல் பாடவில்லை என்ற சலசலப்பு இருந்தது.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

பின் இவர் பாய்ஸ் படத்தில் ஐயப்பன் பக்தி பாடல் பாடியது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஐயப்பன் என்ற பக்தி பாடலை பாடியிருந்தது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அடித்த பேட்டியில் ஜிவி பிரகாஷ், பாய்ஸ் படத்தில் ஐயப்பன் பாடலை உண்மையிலேயே கம்போஸ் பண்ணது பிரவீன் மணி.

பாய்ஸ் பாடல் சர்ச்சை:

நான் அந்தப் பாடலை இசைக்கவும் இல்லை, பாடவும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் ஏ ஆர் ரகுமான் மீது வந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் பிறப்பால் ஒரு இந்து. ஆனால், இஸ்லாத்திற்கு மாறியவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. ரஹ்மானின் இயற் பெயர் திலீப் குமார். ரஹ்மானின் தனது முதல் படமான ரோஜா வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவிய பின்னர் திலீப் குமார் என்ற பெயரை ரகுமான் மாற்றிக்கொண்டார்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமான் மதம் மாறியது:

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தந்தை ஆர் கே சேகர் ஒரு இசையமைப்பாளர் தான். தன்னுடைய 40 வயதில் ஆர்கே சேகர் இறந்துவிட்டார். இவரது இறப்பிற்கு பின்னர் தான் திலீப் குமார் ரஹ்மானாக மாறியது. ஆனால், ரஹ்மானின் தந்தை பெயர் இருக்கட்டும் ஆர் கே சேகர். ரகுமானின் முழு குடும்பமும் மதம் மாறியது. எல்லா சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து, ஐந்து வேளை நமாஸ் செய்யும் பழக்கத்தை செய்து தான் மதம் மாறினார்கள்.

ஏ ஆர் ரகுமான் குடும்பம்:

மேலும், AR என்றால் Allah Rakha அதாவது கடவுளை குறிக்கும் ஒரு சொல். பின் ஏ. ஆர். ரகுமான் அவர்கள் சாய்ரா பானு என்பவரை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். சில வருடங்களுக்கு முன் தான் ஏ ஆர் ரகுமான் மகளுக்கு திருமணம் நடந்தது. தற்போது இவர் மகனும் இசையில் புலமை பெற்று வருகிறார்.

Advertisement