எனக்கு கப்பு மட்டும் போதும், பணம் எல்லாம் மக்களுக்கு கொடுத்துடுவேன் – கடைசி வாரத்தில் உருட்டிய போட்டியாளர்.

0
482
azeem
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா, அமுதவாணன், மைனா நந்தினி, கதிர் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

நேற்றுய நிகழ்ச்சியில் அமுதவாணன் 11,75,000 பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை தொடர்ந்து அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேர் மட்டும் இறுதிப் போட்டி நோக்கி காத்துக்கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக மிட் நைட் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இதன்மூலம் அசீம் விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் இறுதிப்போட்டிக்கு தகுதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

டாப் 3 Finalist :

இந்த சீசனில் விக்ரமன் அல்லது அசீம் தான் டைடிலை அடிப்பார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்து வருகின்றனர். இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் இந்த சீசனில் கண்டட் கொடுக்கும் நபராக இருந்தது அசீம் தான். இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வந்தார்.

அஸீமிற்கு இருக்கும் ஆதரவு :

அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

-விளம்பரம்-

அடிக்கடி கேலிக்கு உள்ளாகும் அசீம் :

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். இருந்தும் எப்படியோ மக்கள் ஆதரவுடன் இறுதி போட்டி வரை வந்துவிட்டார் அசீம். இந்த சீசனில் அசீம் பேசிய பல பேச்சுக்கள் நெட்டிசன்களின் trollகளுக்கு உள்ளாகி இருகிறது.

அஸீமின் அடுத்த உருட்டு :

இதனால் அடிக்கடி ஓவரை ClownAzeem என்று ஹேஷ் டேக்குகளை போட்டு கேலி செய்தும் இருந்தனர். அந்த வகையில் அஸீமின் சமீபத்திய பேச்சு trollகளுக்கு உள்ளாகி இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸில் இருந்து வெளியேறி போட்டியாளர்கள் பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தனர். அப்போது அசீம், ராமிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது ‘நான் பிக்பாஸில் ஒரு வேலை ஜெயித்தால் அந்த பணத்தை வைத்து பல மாணவர்களின் படிப்பிற்கு fees காட்டுவேன்’

கேலி செய்யும் நெட்டிசன்கள் :

‘நான் வின்னர் ஆகி டைட்டில் அடித்துவிட்டேன் என்றால் எனக்கு அந்த கப்பு போதுடா, அந்த காசை எல்லாம் நான் மற்றவர்களுக்கு தான் கொடுக்க நினைக்கிறேன்’ என்று பேசி இருக்கிறார். அஸீமின் இந்த பேச்சை கண்ட ரசிகர்கள் பலரும் அப்போ இதுநாள் வரை சீரியல்களில் நடித்து சம்பாதித்த பணத்தில் ஏதாவது செய்து இருக்கலாமே, பிக் பாஸ் மூலம் வரும் பணத்தில் தான் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமா என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement