இதோட நிறுத்திக்கோங்க – பிக் பாஸ் விக்ரமனுக்கு வாக்கு சேகரித்த திருமாவை கடித்த ராஜேஸ்வரி பிரியா

0
672
rajeswari
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது 18 பேர் வெளியேறிய நிலையில் 3 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர் அந்த மூன்று பேரில் விசிக கட்சியை சேர்ந்த விக்ரமனும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே அசீமிற்கு எதிராக குரல் கொடுப்பது பெண்கள், திரு நங்கைகள், சாதி வெறி போன்றவற்றிக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வந்த பிறகும் அந்த வேலையை சரியாக செய்து வருகிறார்.

-விளம்பரம்-

விக்ரமனுக்கு ஓட்டு சேகரித்த திருமா :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் இருக்கும் விக்ரமனுக்கு முதன் முறையாக நேரடியாக தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் ‘Bigboss-இல் தேர்வில் போட்டியிலிருக்கும் தம்பி விக்ரமன் அவர்களுக்கு வாக்களிப்போம். Hostar வழி வாக்களித்து அவரைத் தேர்வு செய்வோம்.- தொல்.திருமாவளவன், நிறுவனர்- தலைவர், விசிக’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக நிலையில் இதற்கு எதிரிப்பு தெரிவித்தும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ராஜேஸ்வரி பிரியா :

அந்த வகையில் தற்போது திருமாவளவனுக்கும், விக்ரமனுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். இவர் தொடக்கத்தில் பாமகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். பின்னர் பாமக தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அதனை கண்டித்து பாமகவில் இருந்து விலகினார். தற்போது தனி கட்சி தொடங்கி சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை பேட்டியில் மூலம் தொடர்ந்து கூறி வருகிறார்.

சமுதாயத்திற்க்கு சீர்கேடு :

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டித்து அவருடைய கட்சி சார்பில் ஆர்பாட்டத்தியே நடத்தினார். அப்போது கொடுத்த பேட்டியில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் காதலை விமர்சித்த அவர், ஒரு வீட்டில் 4பேரை காதலிக்கும் ஒருவன், ஆபாசமான கருத்துக்கள், ஆபாசமான உடை போன்றனவை சமுதாயத்தை சீர் குலைக்கிறது. இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கின்றனர் அவர்களுக்கு நல்லது எது கேட்டது எது என்று பிரித்து பார்க்க தெரியாது.

-விளம்பரம்-

கமல்ஹாசன் இப்படி செய்யலாமா? :

அப்படிபட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ் நாட்டின் நாளை முதலமைச்சாராக விரும்பும் கால்ஹாசன் தொகுத்து வழங்க அவசியம் என்ன? இன்று தற்போது தமிழ் தமிழ் நாட்டில் நடக்கும் ஆணவ கொலைகள் பற்றி அவரால் பேச முடியுமா? அப்படி அவர் பேசினால் நாங்கள் கடுமையாக கண்டிப்போம் என்று சீறியிருந்தார் ராஜேஸ்வரி பிரியா.

இந்த நிலையில் தான் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் பிக் பாஸில் விளையாடிவரும் விக்ரமானுக்கு வாக்கு சேகரித்திருந்தார். இதற்கு வரவேற்புகள் இருந்தாலும், இதுவரையில் எந்த சீசனிலும் எந்த கட்சியினரும் இதுவரை இப்படி வாக்கு கேட்டதில்லை என்று தங்களுடைய அதிர்ப்திகளையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் ராஜேஷ்வரி பிரியா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ராஜேஸ்வரி பிரியா ட்விட் :

அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் போட்டிருந்த பதிவில் `தொல்.திருமாவளவன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்கு சேகரிப்பது வேடிக்கையாக உள்ளது. எத்தனயோ மக்கள் பணிகள் கிடப்பில் இருக்க தேவையற்ற கலாச்சார சீர்கேட்டிற்கு வித்திடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உங்கள் கட்சிகார தம்பி வெற்றி பெற வாக்கு சேகரிப்பது என்பது அரசியலின் அவலம். சூதாட்டமாக இருந்தாலும் எனது கட்சிகாரன் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவதற்கு சமமாகும்.

இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் :

ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதனால் அரசியல் செய்ய முடியாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்ய தொடங்கியது வேதனை.மண்,மக்கள் என்றெல்லாம் பேசி மக்களை ஏமாற்றுவதனை நிறுத்தி கொள்ளுங்கள். என்று கடுமையாக விமரிசித்திருந்தார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement