கமல் சார் என்னை அப்படி சொன்னா, அவர் மக்களை உதாசீனப்படுத்துறார்ன்னு தான் அர்த்தம் – அசீம் ஆதங்கம்.

0
239
Azeem
- Advertisement -

விஐய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவருக்கும் விக்ரமனுக்கும் தான் அடிக்கடி சண்டை வந்துகொண்டு இருந்தது. அதே போல பிக் பாஸ் முடிந்த பின்னரும் சமூக வலைதளத்தில் அடிக்கடி அஸீமும் விக்ரமனும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

-விளம்பரம்-

அதே போல அசீம் வென்றது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. அசீம் பட்டத்தை வென்றதை விட விக்ரமனுக்கு பட்டத்தை கொடுக்கவில்லை என்பதே பலரின் கருத்தாக இருந்தது. அதே போல கமல், அஸீமிற்க்கு பட்டத்தை கொடுத்துவிட்டு விக்ரமன் தோளில் கைபோட்டு நின்றுகொண்டார். இதனால் கமலுக்கே அசீம் பட்டத்தை வென்றது பிடிக்கவில்லை என்பது போல விமர்சனங்களும் எழுந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதீப் பிக் பாஸில் இருந்து Red Card கொடுத்து அனுப்பப்பட்டார். அதே போல பிரதீப் மற்றவர்களை தர குறைவாக ஆபாச வார்த்தைகளில் திட்டுகிறார். பெண்களுக்கு அவரால் பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய கமல் ‘முந்தைய சீசன்களில் சிலர் வென்றார்கள் என்பதற்காக, அதே போன்ற விளையாட்டை இப்போது விளையாடினால் இப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள் என நினைக்கக் கூடாது.

அன்று ஏன் ஓட்டு போட்டார்கள் என அவர்களுக்கே தெரியாது என நினைக்கிறேன்” எனவும் பேசி இருந்தார். இதனால் அசீமை தான் கமல் குறிப்பிட்டு சொல்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அசீம் இதுகுறித்து பேசியுள்ளதாவது ‘ கமல் சார் என் பெயரைக் குறிப்பிட்டுப்சொல்லவில்லை. இருந்தாலும் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே நிகழ்ச்சி முடிஞ்ச பிறகும் அதுபற்றி தான் விவாதம் போய்க் கொண்டிருந்த சீசன் என்றால் அது நான் கலந்து கொண்ட சீசன் 6 தான்.

-விளம்பரம்-

‘என்னைப் போல அங்கே ஆடி வருவதாக சொன்னார்கள் ஆனால் நான் எந்த தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை வாடி போடி என்று சொன்னேன். ஆனால் அதற்கும் நான் மன்னிப்பு கேட்டு விட்டேன். ஆனால், இந்த சீசனில் பலர் கெட்ட வார்த்தை பேசி வருகிறர்கள். எனக்கு பட்டத்தை விஜய் டிவியோ அல்லது கமல் சாரோ கொடுக்கவில்லை மக்கள்தான் எனக்கு ஓட்டு போட்டு அந்த பட்டத்தை கொடுத்தார்கள்.

கமல் சார் கையில்தான் அந்த கோப்பையை வாங்கினேன். ஆனால், நான் வாங்கியதை இன்னும் கமல் சாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள மறுத்தால் கமல் சார் ரசிகர்கள் போட்ட ஓட்டை உதாசீனப்படுத்தினார் என்று தான் அர்த்தம்.அதேபோல நான் பங்கேற்ற சீசனில் என்னுடன் டைட்டிலுக்காக போட்டியிட்ட விக்ரமன் உள்ளே இருந்தபோது அடிக்கடி பேசிய வார்த்தை அறம் வெல்லும் என்பதுதான் ஆனால் இன்றைக்கு விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்து அதன் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவாகி இருக்கிறது. அதை பபற்றி எல்லா செய்தித்தாள்களும் செய்தி வருகிறது.

Advertisement