‘சினி இண்டஸ்ட்ரில சமீபத்துல அவர் பொண்ணு செத்தத நாம பாக்கல’ – என் பொண்ணோட படிப்ப இதனால் தான் நிறுத்தினேன் – வனிதா அளித்த விளக்கம்.

0
2258
Vanitha
- Advertisement -

தனது மகளின் படிப்பை நிறுத்திய காரணம் குறித்தும் தற்போது தனது மகள் நடிக்கும் படங்கள் குறித்தும் வனிதா பேசி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து வருகிறது. நாட்கள் செல்ல செல்ல போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகளுக்கு கலவரங்களுக்கு வெடித்து இருக்கிறது. அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் வனிதா மகள் ஜோவிகாவிற்கும் விசித்ராவிற்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாள் அன்றே இந்த நிகழ்ச்சிக்கு வந்தது குறித்தும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஜோவிகா, எனக்கு படிப்பு வராது. படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. இதனால் நான் மன அழுத்தத்தில் இருந்தபோது என்னுடைய அம்மா வனிதா தான் நீ என்ன ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார்.

- Advertisement -

நான் உடனே நடிகையாக என்று என்று சொன்னேன். பிறகு என் படிப்பை விட்டு நடிகையாக தேவையான கோர்ஸை எடுத்து படிக்க வைத்தார் என்று பேசிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டவுடன் பலருமே ஜோவிகாவிற்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக யுகேந்திரன் வாசுதேவன், நீ பேசிக்ஸ் பன்னிரண்டாம் வகுப்பு வரை கண்டிப்பாக படித்து விட வேண்டும். அது ரொம்ப முக்கியம் என்று கூறினார்.

உடனே விசித்திரா, முக்கியம் நீ ஒரு டிகிரி ஆவது முடிக்க வேண்டும் என்று சொன்னார். இப்படி மாறி மாறி பலரும் ஜோவிகாவிற்கு அறிவுரையும், சிலர் ஆதரவாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் ஜோவிகா கண்டுகொள்ளாதது போல் தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிலர் தங்களுக்குள் மற்ற போட்டியாளர்களுடன் இருக்கும் மனஸ்தாபங்களை பேசி சரி செய்துகொள்ள முயன்றனர். அப்போது ஜோவிகா, பிக் பாஸ் வந்த முதல் நாளே தன்னிடம் விசித்ரா படிப்பு பற்றி பேசியதை கூறி இருந்தார்.

-விளம்பரம்-

பின்னர் இது பெரிய விவாதமாக மாற ‘நான் டாக்டரோ இஞ்சினியரோ ஆக சொல்லவில்லை. ஒரு +2 வாவது முடி என்று தான் சொன்னேன் என்றார். அதற்கு ஜோவிகாவோ, எனக்கு படிப்பு வரல அதனால எனக்கு ஒன்றும் தெரியாது என்று அர்த்தம் கிடையாது.எனக்கு எழுத படிக்க தெரியும் என்று சொன்னதும் எங்க தமிழ் எழுதி பார்ப்போம் என்று கூறினார். எல்லோரும் டாக்டர் படித்தால் கம்பவுண்டர் யார் ஆகுவது? படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நிறைய மரணங்கள் நடக்கின்றது ரொம்ப எமோஷனலாக ஜோவிகா பேசியிருந்தார். இதற்கு வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களும் அவருக்கு கைதட்டி ஆரவாரம் செய்து இருந்தார்கள்.

இந்நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் வனிதா கூறுகையில் “எந்த நிலையிலும் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறுகின்றேன் இது படித்திருக்கிறேன் தற்பொழுது கொண்டிருக்கின்றேன் என்று எதுவும் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தேன். நான் ஜோவிகாவிடம் கூறியதும் இதுதான் நீ படிப்பு வரவில்லை என்று வீட்டில் அமர்ந்து கொண்டு AC போட்டுக் கொண்டு சும்மா இருக்கவில்லை நீ உனக்கு பிடித்தது செய்து கொண்டு இருக்கிராய். இந்த குழந்தைக்கு படிப்பு வரவில்லை அதற்கு பிடிக்கவில்லை. அந்த சத்தம் பிடிக்கவில்லை. அதற்கு மண்டையில் ஏறவில்லை நானும் அன்பால் புரிந்து கொள்ள வைப்பதற்கு முயற்சி செய்தேன் ஆனால் என்னால் முடியவில்லை.

என்னுடைய பிசினஸ் அவருக்கு முக்கியமில்ல அவருடைய கேரியர் தான் எனக்கு முக்கியம். அதனாலதான் நான் அவளை நான் இயக்குனர் பார்த்திபனிடம் சேர்த்துவிட்டேன். நான் என் மகளை இரவு 10:00 மணி ஆனாலும் ஆட்டோவில் தான் பயணம் செய்ய சொல்லுவேன். எங்களிடமிருந்து 2 கார்கள் உள்ளது ஆனால் ஒரு அசிஸ்டெண்ட் என்பவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் போது காரில் இறங்க கூடாது. பஸ் ஏரியோ அல்லது மெட்ரோவில் சென்றால் தான் அசிஸ்டன்ட் டைரக்டருக்கு வலி அவளுக்கு புரியும். அவள் அங்கு சிறப்பாக செயல்பட்டதால் பார்த்திபன் அவரை பிக் பாஸ் முடித்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறி இருந்தார். மேலும் கூறுகையில் அனைவரும் சர்ப்ரைஸ் ஆன விஷயம் என்னவென்றால் ஜோவிகா பிக் பாஸ் செல்லும் முன்னரே இரண்டு படங்களில் ஹீரோயினியாக நடிக்கவும் கமிட்டாகி பின்னர் தான் பிக் பாஸ்க்கு சென்றுள்ளதாகவும் வனிதா கூறி இருந்தார். அதில் ஒரு தமிழ் படம் மற்றும் தெலுங்கு படம் என்றும் வனிதா கூறி இருந்தார்.

Advertisement