‘அவன் ஒரு சீரியல் ஆர்ட்ஸிட், என் சித்தப்பா இருக்க கட்சியில அவன்’ – விக்ரமன் குறித்து ஏலமானமாக பேசிய அசீம்.

0
765
vikraman
- Advertisement -

கண்டமேனிக்கு அசிம் திட்டியும் விக்ரமன் பொறுமையாக இருந்ததற்கு காரணம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 13 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில் முதல் வாரத்திலேயே முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார். நிகழ்ச்சியின் இரண்டாம் வாரம் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்து இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

அதில் ஜி பி முத்து இந்த வார தலைவர் ஆகியிருக்கிறார். விறுவிறுப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழிந்த பிறகு தான் போட்டியாளர்களுக்கு மத்தியில் சலசலப்பும், சச்சரவும் தொடங்கும். ஆனால், இந்த முறை முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு மத்தியில் சண்டை தொடங்கிவிட்டது. அதிலும் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து அசிம், விக்ரமன் இருவருமே சரியாக பேசிக் கொள்வதில்லை.

பிக் பாஸ் ப்ரோமோ:

அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமாவில் இவர்களின் சண்டை முற்றி விட்டது. அதில், அசிம்- விக்ரமன் பயங்கரமாக சண்டை போட்டு இருக்கிறார்கள். அப்போது விக்ரமனை பார்த்து அசிம், வாடா போட என்று மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார். ஆனால், விக்ரமன் பெரிதாக அசிமிடம் சண்டை போடாமல் இருந்தார். இதனை அடுத்து இதற்கான காரணம் குறித்து அசிம் கூறி இருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அசிம்-விக்ரமன் சண்டை:

அதில், அசிம் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது விக்ரமன் ஒரு சீரியல் நடிகர் தான். முதலில் அவர் சீரியல்களில் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் அவர் அரசியலுக்கு வந்தார். ஆனால், அவர் சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்பதை வெளியில் காண்பித்து கொள்ளவில்லை. நான் சீரியலில் எண்ட்ரியாகவும் போது அவரும் சீரியலில் தான் நடித்து கொண்டு இருந்தார்.

விக்ரமன் குறித்து அசிம் சொன்னது:

மேலும், என்னுடைய அப்பா உடன் பிறந்த தம்பி. அதாவது, என் சித்தப்பா உடைய கட்சியில் அவன் உறுப்பினராக இருக்கிறான். அதனால் தான் அவன் என்னிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி அசிம் கூறியது போல விக்ரமன் கோபப்படாமல் பொறுமையாக போவதற்கு காரணம் இதுவாக தான் இருக்குமோ? என்று ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement