துருவ் பேசிய வீடீயோவை பாலா -ஷிவானிக்கு போட்டு பங்கம் செய்யும் நெட்டிசன்கள். ஏன் தெரியுமா? வீடியோவ பாருங்க.

0
1265
bala
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கதை இருப்பது புதிதான விஷயம் கிடையாது. அந்த வகையில் இந்த சீசனில் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேப்ரில்லாவிற்கும் ட்ராக் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாலாஜியோ கேப்ரில்லாவை தங்கை என்று கூறிவிட்டார். தற்போது பாலாஜி மற்றும் ஷிவானியின் லவ் ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே காதல் இல்லை என்று இவர்கள் இருவரும் சொல்லிக் கொண்டு வந்தாலும் மற்ற போட்டியாளர்கள் அனைவருமே பாலாஜி ஷிவானி காதலித்து வருகிறார்கள் என்றுதான் சூசகமாக பேசிக்கொண்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஆனால், பாலா இந்த காதல் கதையை ஒப்புக்கொள்ளாமல் தான் இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாமினேஷன் டாஸ்க் போது ஆரி, பாலாஜியை நாமினேட் செய்தார். அப்போது அவர் பாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்கிறது என்று கூறியிருந்தார். நாமினேஷன் முடிந்ததும் போட்டியாளர்கள் சொன்ன காரணங்களை அனைத்தையும் பிக்பாஸ் போட்டு உடைத்தார். அப்போது காதல் கண்ணை மறைக்கிறது என்ற வார்த்தையை பிக்பாஸ் அறிவித்ததும் கடுப்பான பாலாஜி, இங்கே யாருக்கும் காதல் எல்லாம் கிடையாது அப்படி ஏதாவது என் காதில் விழுந்தால் நான் நன்றாக கேட்டு விடுவேன் என்று கூறினார்.

- Advertisement -

அதேபோல சிறிது நேரம் கழித்து சிவனிடம் எனக்கு உன் மேல் காதல் எல்லாம் இல்லை ஆனால் வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் என்றார் பாலாஜி. பாலாஜி ஷிவானி ரொமான்ஸ் விஷயத்தில் இருவருமே இலை மறை காய் மறையாக தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஷிவானி பாலாஜி மீது காதலை வைத்திருக்கிறார் என்பது தான் பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இதை நேற்று ஆரியே கேட்டு விட்டார்.

இன்னும் தாலி மட்டும் தான் கட்டனும் போல! எல்லை மீறும் பயில்வான், ஷிவானி  ஜோடி.. நொந்து போன ரசிகர்கள்! - Cinemapettai

அதே போல பாலாஜி எத்தனை முறை தட்டிக்கழித்தாலும் பாலாஜியை சுற்றி சுற்றி வருகிறார். இதனால் ஷிவானி மற்றும் பாலாஜியை கலாய்த்து பல மீம்களும் வீடியோகளும் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் விக்ரம் மகன் துருவ் நடித்த ‘வர்மா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் துருவ், ‘பாலா மாமா, பாலா மாமா’ என்று கூறியதை ஷிவானி மற்றும் பாலாவை வைத்து எடிட் செய்து மீம் கிரியேட்டர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement