பத் சொன்னது சரி தான் – Ivfல் குழந்தை பெற்ற மனைவியும், 10 வருடம் குழந்தை இல்லாத கணவர் பதிவிட்ட உருக்கமான பதிவுகள்.

0
814
Venkateshbhat
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் தான். கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் தான் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள் அதிலும் வெங்கடேஷ் பத் கோமாளிகளை வச்சி செய்து விடுவார்.

- Advertisement -

குக்கு வித் கோமாளியால் கர்ப்பமான பெண் :

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் stress Bustarஆக இருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒரு விஷயம் தான். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பெண் ஒருவர் கர்பமானதாக வெங்கடேஷ் பத் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்திய எபிசோட் ஒன்றில் பேசிய பத் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு பெண் இந்நிகழ்ச்சி பார்த்து கர்ப்பமானதாக கூறினார். அதாவது இது அவ்வளவு ஜாலியாக டென்ஷனை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதாக கூறினார். இப்படி வெங்கடேஷ் பத் கூறி இருப்பது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை பெருமடைய செய்தாலும் நெட்டிசன்கள் பலர் meme போட்டு கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் :

ஆனால், உண்மையில் IVF மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு உண்மையில் Stress இருக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறினர் என்று ஒரு சிலர் ரசிகர்களே தங்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் முகநூல் பக்கத்தில் ஒருவர் ‘நானும் என் மனைவியும் போன மாசம் 5 வது மாசம் ஸ்கேன் எடுக்க போனோம்.

அப்போ டாக்டர் சொன்ன விஷயம் இதுதான்.. குழந்தை நல்லா இருக்கு.. கூடிய மட்டிலும் பாசிட்டிவான விஷயம் மட்டுமே பாருங்க.. கேளுங்க.. உங்களை நீங்க ஹாப்பியா வெச்சிக்கிட்டா குழந்தையும் நல்லா வளரும்..

அதனாலே அவளுக்கு சாப்பிடுறதுல இருந்து அவளுக்கு Prime, Hotstar னு எல்லா arrangementsமே பக்காவா பண்ணி கொடுத்துட்டேன்.. அவளோட பொழுதுபோக்கு Tv Shows, பாட்டுதான்

வெங்கடேஷ் பட் சொன்னது உருட்டோ என்னமோ அதை பத்தி நான் கமென்ட் பண்ண விரும்பல.. ஆனா எனக்கும் என் மனைவிக்கு சில நேரத்துல stress buster ஆக இருந்த, இப்போவும் இருக்குற டிவி ஷோ ல குக் வித் கோமாலியும் ஒன்னு..

எனக்கு தெரிஞ்சு உடலுறவுக்கும், கருத்தரித்தலுக்கும் உடல் வலிமையை விட மனநலம், மனவலிமை ரொம்பவே அவசியம்.. நல்லா ஹெல்த்தியாக இருந்தாலும் மைண்ட் ல ஆயிரத்தெட்டு டென்ஷன் இருந்து குழந்தைக்காக முயற்சி பண்ணா ஒன்னும் நடக்காது..

அனுபவத்துல சொல்றேன் என்று பதிவிட்டுள்ளார். இவரை போலவே ட்விட்டர் பக்கத்தில் கூட ரசிகர் ஒருவர் ‘எங்களுக்கு 10 வருசமா குழந்தை இல்லை. Unknown infertility ன்னு categorize பன்னியாச்சு, because we both were healthy. எவ்ளோ treatment laproscopy , எத்தனையோ iui, ivf .இதுல ஒரு குழந்தை பிறந்து இறந்து போச்சு. You won’t believe how stressful it is to handle.அந்த இழப்பில் இருந்து மீளவே முடியாம தான் ட்விட்டர் வந்தது. எங்காவது ஊர் பேர் தெரியாத இடத்துக்கு ஓடி போய்டலாமானு தோனும்ல அந்த இடம் தான் ட்விட்டர். நம்பல யாருக்கும் தெரியாது இங்க பேசும் கதையில் கவலை மறக்க ஒரு வடிகால்’ என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement