மக்கள் எதோ செய்துவிட்டு ஒரு 1001 ரூ அந்த போலீஸ் குடும்பத்துக்கு கொடுத்தால் ஓகே வா – வெளுத்து வாங்கிய பாலாஜி.

0
9325
Balaji

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகம் முழுவதும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31). இவர்கள் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை வைத்திருக்கிறார்கள். ஜெயராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்து வைத்துள்ளார். இதனால் காவல் துறை அதிகாரி ஜெயராஜ் இடம் விசாரித்து உள்ளார். அப்போது காவல்துறையினருக்கும், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தந்தை மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கி உள்ளனர். இரவு முழுவதும் அவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உள்ளனர் போலீஸ். காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. அது மட்டும் அல்லாமல் ஆசனவாயில் லத்தியை வைத்து அடித்து துன்புறுத்தியதாக செய்திகள் வந்தது.

- Advertisement -

பின் இவர்கள் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து உள்ளனர். ஆனால், இருவருமே சிகிக்சை பலனின்றி தந்தை, மகன் அநியாயமாக மரணமடைந்தார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பல்வேறு திரை பிரபலங்கள் கூட இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாடி பாலாஜி இதுகுறித்த பேசுகையில், இவர்கள் காவல் துறையா இல்லை ஜாக்சன் துறையா? இருவரை கொன்றுவிட்டு காசு கொடுத்தால் போதுமா ? இப்போ இதே போலீசை பொது மக்கள் எதோ ஒன்று செய்துவிட்டு 1001 ரூபாய் கொடுத்தால் அது சரியா ? நாம் தப்பு பண்ணால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மேலும், இந்த தவறை செய்தர்வகளுக்கு இடமாற்றம் ஒரு தண்டனையா ? நீங்கள் போட்டுகொண்டு இருக்கும் காக்கி சட்டைக்கு தான் மரியாதை. காவல் துறையும், டிராபிக் துறையும் மக்களை மரியாதையே கொடுப்பது இல்லை. தூத்துக்குடியில் காசி என்பவனை என்ன செய்தீர்கள் என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement