நான் அவரை பார்த்ததும் வணக்கம் சொன்னேன். ஆனால் , அவர்- பொது நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பை சந்தித்த பரணி.

0
1215
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் பரணியும் ஒருவர். இவர் கல்லூரி, நாடோடிகள்,விலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். பின் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் பரணி மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நாடோடிகள் 2 என்ற படத்தில் நடித்தார். தற்போது இவர் குச்சி ஐஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார். இந்த படம் 90 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு இருப்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பிரபலங்கள் பலர் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Bharani Predicts Oviya Will Be Winner of Bigg Boss Tamil

அந்த வகையில் நடிகர் பரணி அவர்கள் சென்னையில் மாட்டிக்கொண்டார். பின் சில தினங்களுக்கு முன்பு தான் இ பாஸ் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் மதுரை சென்றார். இந்நிலையில் நடிகர் பரணியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியது, நான் ஹீரோவாக நடித்த முதல் படம் இது தான். ஆனால்,அதற்குள் கொரோனா வந்து சதி பண்ணி விட்டது. நான் ஹீரோவாகுவதில் எங்கெல்லாம் பிரச்சனை வருது. அதுமட்டுமில்லாமல் இந்த கொரோனாவினால் தியேட்டர் ரிலீஸ், ஓடிடி ரிலீஸ் என்று சினிமாவில் பல மாற்றங்களும் பிரச்சனைகளும் வந்துகொண்டிருக்கிறது.

- Advertisement -

என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம். இந்த இக்கட்டான சூழல் சாதாரண மனிதனுக்கு மட்டும் இல்லை எங்கள மாதிரி நடிகர்களுக்கும் இருக்கு. அதே நேரம் என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து வருகிறேன். மேலும், பிக் பாஸில் சண்டை போட்ட பிறகு நானும், கஞ்ச கருப்பு அண்ணனும் சந்தித்தோம். மதுரை ஒத்தக்கடையில் கபடி போட்டி ரொம்ப ஃபேமஸ். ஒரு நாளுக்கு முன்னாடி நடந்த அந்த போட்டியில் நான் கலந்துகொண்டேன்.

அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக கஞ்சா கருப்பு அண்ணன் தான் வந்திருந்தார். நான் பார்த்ததும் வணக்கம் சொன்னேன். ஏய் நீ இங்கேயும் வந்துட்டியா என்று சொன்னார். அண்ணே நம்ம ரெண்டு பேரும் போட்டியாளர் கிடையாது. நீங்கள் பரிசு அளிக்கும் இடத்துக்கு வந்து இருக்கீங்க. நான் ஜாலியா விளையாட வந்தேன். சரி நீ போய் எல்லாத்தையும் அவுட்டாகி விட்டு வா கோப்பையை தரேன் என்று சிரித்து கொண்டு எனக்கு வாழ்த்து சொன்னார் என்று பரணி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

-விளம்பரம்-
Advertisement