ஆமாம், அதற்காக தான் விஜய் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். கடுப்பேற்றிய ரசிகர் முதன் முறையாக கூறிய சேரன்.

0
46069
cheran
- Advertisement -

பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் இயக்கத்தில் 2000-யில் வெளி வந்த திரைப்படம் ‘வெற்றிக் கொடிகட்டு’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில், இந்த படம் முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் ஒளிபரப்பப்பட்டது. அதனை பார்த்த பிரபல இயக்குநரும், நடிகருமான ஜெகன் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் “வெற்றிக் கொடிகட்டு திரைப்படம் உதவி இயக்குநராக நான் பணிபுரிந்த நான்காவது படம். தற்போது, சன் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் crowd & sub character-களில் எனது குரலை கேட்க முடிந்தது. நன்றி இயக்குநர் சேரன் சார். உங்கள் உழைப்பு அசாத்தியமானது. பார்த்திபன் – வடிவேலு காம்போ தூள்.. மிஸ் யூ முரளி அண்ணா, மனோரமா மேம், ஒளிப்பதிவாளர் பிரியன்” என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு இயக்குநர் சேரன் “மிக்க நன்றி ஜெகன்.. உங்கள் உழைப்பும் என் முன்னேற்றத்துக்கு ஒரு காரணம் என்பதை நான் என்றுமே மறந்ததில்லை.. உங்களைப்போலவே என்னோடு பணிபுரிந்த அனைத்து ADக்களுக்கும் எனது எல்லா வெற்றியிலும் பங்கு உண்டு.. நன்றியுடன் சேரன்” என்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் சேரனிடம் “உங்களது உதவி இயக்குநர்கள் யார் யார் சார்.. அவர்களது உழைப்பை வாங்கி நீங்கள் மட்டுமே வெளியே தெரிகிறீர்கள். அவர்களிடம் கடும் வேலையை வாங்கிவிட்டு அவர்களுக்கு நீங்கள் செய்த நன்மை என்ன? உங்களை சுயநலவாதி என்று இயக்குநர் பார்த்திபன் சொன்னதில் உண்மை இருக்கும் போல” என்று கேட்டிருந்தார்.

இதையும் பாருங்க : ஒரு வருடத்திற்கு 1 ரூபாய் சம்பளம் வாங்க ரெடி. அறிவித்த பிக் பாஸ் 1 நடிகை. யாரு தெரியுமா ?

- Advertisement -

அதற்கு சேரன் “ஹாஹா… உங்களுக்கு அதை சொல்ல அவசியமில்லை… நான் யாருக்கு என்ன செய்தேன் என்பது எனக்கும் அவர்களுக்குமானது.. யார் யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது அவர்களை கவனித்தவர்களுக்கு புரியும்…” என்று பதில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெகன் “சேரன் சாருக்கு கதை, வசனம் எழுத யாரும் உதவ தேவையில்லை. அவர் எப்பவுமே One Man Army. ஒரு இயக்குனராக அவர் சொல்வதை செய்ய, யூனிட்டில் உள்ள 140 பேரில் உதவி இயக்குனர்களும் அடக்கம்” என்று தெரிவித்திருந்தார்.

ஜெகனின் ட்வீட்டிற்கு அந்த ரசிகர் “ஜெகன் அண்ணே.. நீங்கள் எடுத்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தின் கதை விஷயத்தில் சீன் பை சீன் சேரன் அவர்களின் தலையீடு மிகபெரிய அளவில் இருந்ததாக அந்த படம் வந்த சமயத்தில் நாளிதழ்களில் செய்தி வெளிவந்தது. டைரக்டருக்கு ஒரு கெத்து இருக்கனும்ல. உங்க கதையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா அப்போ?” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு சேரன் “இவர் எதோ வேற முயற்சி பன்றாரு. இவருக்கு பொழப்புக்கு வழி இல்லை போல.. அட்ரஸ் இல்லைன்னா போன் நமப்ர் அனுப்புங்க ப்ரதர்.. நீங்க நினைக்கிறதவிட நிறைய கிடைக்கும்.. அடுத்தவன் கதைய கேக்குறதுல அவ்வளவு ஆர்வம். ஜெகன் முன்னேற்றத்துக்கு எங்கயாவது நீங்க காரணமா… எதுக்கு உங்களுக்கு..” என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ஜெகன் அந்த ரசிகரிடம் “தம்பி கபிலன், ஒருவருடைய சுவாசத்தை அவரே சுவாசிக்க முடியும். படைப்பிலும் நான் அப்படியே.. சுயமரியாதையும் , சுதந்திரமும் உயிருக்கும் மேல். அதை கற்றுக்கொண்டதே சேரன் சாரிடம் தான். காலம் சாதனையாளர்களை மதிக்கவும், சிலவற்றை கடந்துபோகவும் கற்றுக.கொடுத்து இருக்கிறது. உங்களின் பதிவை போல” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அந்த ரசிகர் “அண்னே இப்படி அப்பட்டமா பொய் சொல்றீங்களே.அவர் உங்கள் கதையில் தலையிடவில்லலை என்று உங்கள் குழந்தை மேல் சத்தியம் செய்ய முடியுமா? சாதணையாளராக இருந்தாலும் நியாயம் ஒன்றாக தான் இருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் சாதணையாளர் தன் மீது தவறு இல்லை என்றால் என் தவறை வார்த்தகளால் உணர்த்திருக்கலாம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : படுக்கைக்கு அழைக்க அது தான் கோட் வேர்ட். ‘காமசூத்ரா’ நடிகை சொன்ன பகீர் தகவல்.

இதனைத் தொடர்ந்து சேரன் “அதற்கு எதற்கு குழந்தை மீதெல்லாம்.. நீங்கள் எதை கொண்டுவர முயற்சி பன்றீங்க.. பார்த்திபன் சாரை இழுக்கிறீங்க.. புரியல. என்னை பிடிக்கனும்னு கட்டாயப்படுத்தல. ஆனால் தனிமனித ப்ரச்னைகளை சம்பந்தமில்லாத நீங்கள் எதற்காக பேசுகிறீர்கள்.. புரியவில்லை. இதற்கு மேல் எனக்கு உங்களை மதிக்கத்தெரியாது” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அந்த ரசிகர் “சார் உங்களை யாருக்கு தான் பிடிக்காது. பிக்பாஸ் நடக்கும் போது உங்களுக்கு சப்போர்ட் செய்தவன் நான். உங்கள் படங்களை ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன். அந்த பேட்டி எனக்கு நெருடலாய் இருந்தது. அதை கேட்டேன் அவ்வளவு தான். மற்றபடி உங்களை சிறுமை படுத்தும் எண்ணம் எனக்கில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சேரன் “அதற்கு கேட்கும் முறையென ஒன்று இருக்கு தம்பி.. உங்கள் முதல் பதிவை படியுங்கள் என் இடத்தில் இருந்து, புரியும். அதில் பொதுநாகரீகம் இல்லாமல் இருந்ததால்தான் என் பதிலும் ..
என்னை பிடிக்கும் என்றால் என்னிடம் உங்கள் பேட்டி தவறு என தனிப்பெட்டியில் சுட்டிக்காட்டலாமே.. எதுவாயினும் நன்றி” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர் “நான் சரியான முறையில் தான் பேசினேன் சார். நீங்கள் பொது ஊடகத்தில் பேசியதை நான் பொது ஊடகத்தில் கேட்டேன். ஒரு பெரிய இயக்குனரை தரம் தாழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நன்றி சார்!” என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சேரன் “இதுதான் உங்கள் முதல் பதிவு. என் உதவி இயக்குனர்களுக்கு நான் என்ன செய்தேனென தெரியாமல் இதை எப்படி கேட்கிறீர்கள். ‘புதிய கீதை’ படத்தில் அவர் ஜெயித்துவிட வேண்டும், முதல் படம் தடுமாறக்கூடாது என ஒருவாரம் ஜெகனோடு உதவி இயக்குனராக நான் வேலை செய்ததை உங்களுக்கு சொல்ல முடியுமா” என்று பதிவிட்டிருந்தார். அதன் பிறகு இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் அந்த ரசிகரிடம் “Mr Kabilan manoharan இத்துடன் இதை நிறைவு செய்யுங்கள் தயவு செய்து விவாதம் 100 நடந்தாலும் ‘பாரதி கண்ணம்மா’win கதையே 100% காரணம்.அது திரு சேரன் அவர்களையே சேரனும்.நாமின்று போராட உயிரை குடிக்கும் கொரோனாவும், கொடிய TASMAC-க்கும் இருக்கிறது. Be safe and avoid going OUT(of our real probs)” என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பார்த்திபனின் ட்வீட்டிற்கு சேரன் “தவறை அவருக்கு உணர்த்தியமைக்கு நன்றி சார்.. நீங்களும் நானும் நமது பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டோம், காலம் அதை நமக்கு எப்படி உணர்த்தியது.. அதைக்கடந்து நாம் இருவரும் இபோதும் பேசி பயணிக்கிறோம் என்ற பக்குவம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இவைகளெல்லாம் சந்திக்க நேரிடுகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement