7 வருடங்களுக்கு முன் கல்லூரி விழாவில் சேரன் சொல்யுள்ள கதை – படமாக்க சொன்ன ரசிகருக்கு சேரன் சொன்ன பதில்.

0
930
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். சமீப காலமாக இவர் திரைப்படங்களை இயக்குவது இல்லை. இப்படி ஒரு நிலையில் சேரன் கல்லூரி விழாவில் சொன்ன கதை பற்றி தற்போது ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில், 2014 ல் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் திரு. சேரன் அவர்கள் தான் சிறப்பு விருந்தினர், அவரிடம் கேள்விகள் கேட்பவர்கள் கேட்கலாம் என்றதும் ஆசிரியை ஜெயந்த் அவர்கள் சொன்ன கேள்வி நீங்கள் படமாக்க நினைத்து முடியாத அல்லது வரும் காலங்களில் படமாக்க இருக்கும் கதை எதுவும் உள்ளதா என்று கேட்டேன், அதற்கு அவர் சொன்ன பதில் இன்றும் நன்கு நினைவில் உள்ளது.

- Advertisement -

” அம்மா ஒரு நாட்டிலும்,அப்பா ஒரு நாட்டிலும்,அண்ணன், அக்கா,தங்கை என எல்லோரும் ஒவ்வொரு நாட்டில் இருந்து அல்லல்படும் துன்பத்தையும் அவர்களின் வலியையும் படமாக்க விரும்புகிறேன். நீ தயாரித்தால் நான் படமாக்க. தயாராக இருக்கிறேன்” என்றார். சுரேஷ் காமாட்சி (மாநாடு தயாரிப்பாளர்) அண்ணா நீங்கள் நினைத்தால் இது சாத்தியம் என்று தோன்றுகிறது முடிந்தால் செய்யுங்கள்.

cheran

சேரன் அண்ணா, அப்படி இல்லையென்றாலும் என்னிடம் அந்த அளவு பணம் வரும் போது கண்டிப்பாக உங்களிடம் வருவேன். நன்றி என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த சேரன், நினைவில் வைத்து பகிர்ந்தமைக்கு நன்றி.. அன்று இருந்த அதே தாகம் தான் இன்றும்… எப்போது தீரும் என யார் அறிவார்.. ஆனால் அது கண்டிப்பாக நடக்கும் என்று மட்டும் என் உள்மனம் சொல்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement