பிக் பாஸில் இருந்து ஏன் வெளியேறினீங்க, தாமரையோட என்ன பிரச்சனை ? – ரசிகர்ளின் பல கேள்விகளுக்கு பதில் அளித்த நமீதா.

0
841
namitha
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். அதிலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், திருநங்கை நமீதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த சில தினங்களிலேயே தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் நமிதா மாரிமுத்து அவர்கள் தான் எதிர்கொண்ட சிக்கல்களையும், கஷ்டங்களையும், சவால்களையும் குறித்து பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து கடைசியாக நமிதா மாரிமுத்துக்கும், தாமரைச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருந்தது என்றும் அப்போதும் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்தினார் என்றும் இதனால் தான் நமிதா மாரிமுத்து அவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாககூறப்பட்டது. மேலும், இது குறித்து சோஷியல் மீடியாவில் பல விமர்சனங்களும், கருத்துக்களும் எழுந்து இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நமிதா மாரிமுத்து அவர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அதில், நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒயில்கார்ட்டில் போவீர்களா? என்று ரசிகர்கள் கேட்டதற்கு, போகலாம் போகாமலும் இருக்கலாம் என்று பதிலளித்து இருந்தார். பின் இந்த சீசனில் பிக்பாஸ் வின்னர் யார் இருப்பார்கள் என்று கேட்டதற்கு நமிதா மாரிமுத்து சி பி சந்திரன் அல்லது இசைவாணி இருவரில் யாராவது ஒருவர் இருப்பார்கள் என்று பதிலளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த சீசன் டைட்டில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், உங்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் என்று ரசிகர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு நமிதா மாரிமுத்து அவர்கள் நான் உங்கள் அனைவரின் அன்பையும் பெற்று இருக்கிறேன். அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பின் ரசிகர்கள் தாமரைக்கும் உங்களுக்கும் இடையே நடந்த பிரச்சனை பற்றி கேட்டதற்கு நமிதா மாரிமுத்து, அவர் ஒரு நல்ல மனசி தான். ஆனால், அவருக்கு மக்களை கவர்ந்து அதை தக்கவைத்துக் கொள்ளும் கேம் திறமை இல்லை. இது என்னுடைய கருத்து தான். உண்மையில் தாமரை ஒரு வெள்ளந்தியா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், இந்த விளையாட்டு விளையாடுவதற்கு அவருக்கு வலுவில்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கும் தாமரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. என் குடும்ப நிகழ்ச்சிகளில் அவரை ஃபர்பார்ம் பண்ண வைக்கவும் நான் திட்டமிட்டிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

Advertisement