என்னது, Bluetooth ஷூவை பயன்படுத்தினாரா இந்த போட்டியாளர் ? சந்தேகத்தில் பரிசோதித்துள்ள பிக் பாஸ் – சர்ச்சையை கிளப்பிய வீடியோ.

0
305
mani
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிகண்டன் ஷூவில் ப்ளூடூத்தை பயன்படுத்தி இருப்பதற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் கமெண்ட்ஸ் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

வழக்கம் போல் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மொத்தம் 21 பேரில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து 5 பேர் வெளியாகி தற்போது 16 விளையாடி வருகிறார்கள். இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் மணிகண்டன் விதிமீறி இருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்து உள்ளது.

மைனா நந்தினி-நிவா பேசியது:

அதாவது, நிவாஷினியும், மைனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மைனா, நானும் மணியும் ப்ளூடூத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். மணிகண்டன் ஷுவில் ப்ளூடூத் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு பிக் பாஸ் அவருடைய ஷூவை பரிசோதிக்க எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அது எதனால் என்று தெரியவில்லை. ஒருவேளை வீட்டுக்குள் ஏதாவது ப்ளூடூத் இருந்து அதில் கனெக்ட் ஆகுமா என்று செக் பண்ணுகிறார்களா? இல்லை நீக்குகிறார்களா? என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

கன்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்:

இப்படி இவர்கள் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே கண்டித்து, இது விதிமீறல் இல்லையா? மைக்கை சரியாக போடவில்லை என்றால் கூட கண்டனம் தெரிவிக்கும் பிக் பாஸ் மணிகண்டன் ஷுவில் ப்ளூடூத்தை பயன்படுத்தி இருப்பது தவறான செயல். அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றெல்லாம் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே நான்காவது சீசனில் சோம் சேகர் தலையை குனிந்த படி தனது தொடைக்கு அருகில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார்.

சோம் செய்த செயல்:

அது பயங்கர சர்ச்சையாக இருந்தது. இவர் செல்போனை தான் நோண்டிக் கொண்டிருந்தார் என்றெல்லாம் பலரும் கூறியிருந்தார்கள். உண்மையில் சோம் சேகர் செல்போனை பயன்படுத்தினாரா? இல்லை அவர் தனது சட்டையில் இருந்த கரையை நீக்கினாரா? என்று தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் மணிகண்டன் ஷூவில் ப்ளூடூத் பயன்படுத்தியிருக்கும் சர்ச்சை சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு பிக் பாஸ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement