ரசிகர்கள் பலர் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக இன்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பிரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் கலந்துகொண்டார். அவரை தொடர்ந்து பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன் என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
#Poornima To #Coolsuresh
— TN 72 (@mentalans) October 1, 2023
Neenga Neraya Sambavam Panirukeenga .😂#BiggBossTamil7 #BiggBossTamil#LeoTrailer pic.twitter.com/lxsf7AROj0
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பிரபலங்கள் கலந்துகொள்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் இந்த சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற கூல் சுரேஷை பற்றி சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். நேற்றய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் உள்ளே சென்றதும் பிக் பாஸ் அவரை கன்பக்ஷன் ரூமிற்கு அழைத்து நீங்கள் தான் இந்த வீட்டின் முதல் கேப்டன் என்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.
உடனே இதனால் மகிழ்ச்சி அடைந்தார் கூல் சுரேஷ். ஆனால், ஒரு ட்விஸ்ட்டை வைத்தார் பிக் பாஸ். அதவாது உங்களுக்கு அடுத்து வரும் போட்டியாளரை சமாதானம் செய்து நீங்கள் கேப்டன் பதவியை தக்க வைக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு அடுத்து வரும் போட்டியாளர் கேப்டன் ஆகிவீடுவார். இருவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் கேப்டன் என்று முடிவு எடுக்காவிட்டால் கேப்டன் பதவி அடுத்து உள்ளே வரும் போட்டியாளருக்கு பொய்விடும் என்றார்.
தலைவன் கடைசி சம்பவம் நியாபகம் வந்துடுச்சி போல 😂😂#biggbosstamil7 #CoolSuresh pic.twitter.com/863NC7hd22
— 𒆜வசந்த நிலவன்𒆜 (@always_merlin) October 1, 2023
இதனை தொடர்ந்து பூர்ணிமா ரவி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். உள்ளே வந்ததும் கூல் சுரேஷிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்துக்கொண்டார். அப்போது பேசிய அவர் ‘இருவரும் முன்பே சந்தித்து இருக்கிறோம் என பூர்ணிமா சொல்ல, அப்படியா என ஆச்சரியத்தோடு கூல் சுரேஷ் கேட்டார். உடனே, காரில் சென்று கொண்டிருந்த என்னை வழி மறித்து பேசினீர்கள் என்ற குண்டை தூக்கி போட கூல் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து ஒரு படத்தில் நடித்த நடிகை என நினைத்து வழி மறித்ததாக கூறி சமாளித்தார் கூல் சுரேஷ்.இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக வந்த பூர்ணிமாவுக்கும் கூல் சுரேஷூக்கும் யார் கேப்டனாக இருப்பது என்று கடுமையாக விவாதம் நடந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த கூல் சுரேஷ் தானே முன்வந்து அரை மனதாக தனது கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்தார்.
When #CoolSuresh remembers the belt treatment he got 🤣#biggbosstamil7 pic.twitter.com/P6kJNZ6ehI
— Troll Mafia (@offl_trollmafia) October 1, 2023
அப்போது பூர்ணிமா ரவி, நீங்களே இந்த பேண்டை கட்டிவிடுங்கள் என்று கூறியதும், அவரது கையில் பேண்டை கட்ட சென்ற கூல் சுரேஷ்,ஒரு கணம் யோசித்து ‘இல்ல நீங்களே கட்டிகோங்க’ என்று கூறி அவரிடமே அந்த பேண்டை கொடுத்துவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மேடையில் தொகுப்பாளினி ஒருவர் மீது வம்படியாக மாலை போட்டு சர்ச்சையில் சிக்கினார் கூல் சுரேஷ். அது நினைவிற்கு வந்ததால் தான் பூர்ணிமா பேண்டை கட்ட சொல்லியும் கூல் சுரேஷ் கட்டவில்லை.