ஒரு அம்மாவான பின் தான் இதெல்லாம் புரியும் – பிக் பாஸில் கலந்துகொண்டுள்ள தனது மகளுக்காக வனிதா போட்ட உருக்கமான பதிவு.

0
1384
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் எக்ஸ்க்ளூசிவ் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக இன்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பிரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் கலந்துகொண்டார். அவரை தொடர்ந்து பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன் என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் வனிதா மகள்:

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பிரபலங்கள் கலந்துகொள்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் இந்த சீசனில் வனிதாவின் மகள் ஜோவிதா போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் உள்ளே செல்லும் முன்பாக தனது மகளுக்கு மறைமுகமாக வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘நீங்கள் அம்மாவாக ஆகும் போது உங்களுக்கு புரியும்.

வனிதா பதிவு:

ஏன் உங்கள் அம்மா உங்களை உங்கள் காலில் நிற்க வைக்க குரல் கொடுத்தார் என்றும், ஏன் நீங்கள் கேட்கும் போது ‘நோ’ சொல்லி உங்களுக்கு பாடம் எடுத்துவிட்டு அவர் ஏன் அழுதார் என்றும் உங்களுக்கு புரியும். உங்களுக்கு தண்ணீர் இருக்கிறதா, நேப்கின் இருக்கிறதா என்பதை ஏன் பார்த்தார். ஏன் ஒரு அம்மா லேட்டாக சாப்பிட்டால் என்பதும் நீங்கள் அம்மாவாகும் போது புரியும். ஏன் உங்களை உந்தி தள்ளி பின்னர் உங்களை கட்டி அணைத்தார் என்பதும் புரியும். நீங்கள் அம்மாவாகும் போது தான் இதெல்லாம் புரியும். புரிந்துகொள்ள பல விஷயங்கள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா :

ஏற்கனவே வனிதா விஜயக்குனர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தது அனைவரும் அறிந்ததே. அது மட்டும் இல்லாமல் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். இரண்டிலுமே இவருடைய குரல் தான் வீட்டில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சண்டை, சச்சரவு என்று இருந்தாலும் அதிகமான கன்டன்டை வனிதா தான் கொடுத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் வனிதாவிற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமே கிடைத்தது.

ஜோவிதா குறித்த தகவல்;

தற்போது அவர் சினிமா, நிகழ்ச்சி, சொந்தமாக தொழில் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். அதேபோல் வனிதாவின் மகள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவாரா? என்பதை வரும் நாட்களில் தான் தெரிய வரும். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட வனிதா தன்னுடைய மகளை நடிகையாக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். அதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் பயன்படுத்தி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவின் மகள் ஜோவிதாவிற்கு பட வாய்ப்புகள் அமையுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement