சுவர் ஏறி பிக் பாஸ் வீட்டைவிட்டு தப்ப முயன்ற கூல் சுரேஷ் – கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ்.

0
524
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10  வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பின் வைல்ட் கார்ட் மூலம் அனன்யா, விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட்டார்கள். கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி ‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது.

- Advertisement -

அதோடு கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தது. அதிலும் அர்ச்சனா – நிக்சன் ஆகியோர் இடையே பெரும் சண்டை வெடித்தது. இந்த சண்டையின் போது நிக்சன், அர்ச்சனாவை படு மோசமாக பேசி இருந்தார். மேலும், இனி வினுஷா பத்தி யாராவது பேசுனீங்க ‘சொருகிடுவேன்’ என்று கூறி இருந்தது மற்ற போட்டியாளர்களை கூட கோபத்தில் ஆழ்த்தியது. நிக்சன் இப்படி பேசியதற்காக கடந்த வாரம் அவருக்கு Yellow Card கொடுக்கப்பட்டது.

நேற்றைய எபிசோட்:

ஆனால், அவரை கண்டித்ததை விட தினேஷ், அர்ச்சனா, மணி, விஷ்ணுவை தான் கமல் அதிகம் கண்டித்து இருந்தார். அதிலும் தினேஷ், நிக்சனை பார்த்து தொளலத் என்று சொன்ன வார்த்தைக்கு அவரை கடுமையாக எச்சரித்து இருந்தார் கமல். ஆனால், இதை விட மோசமாக பேசிய பூர்ணிமா, மாயாவை இது வரை கமல் ஏன் கண்டிக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமாவிற்க்கு ஆதரவாக பேசியது பிக் பாஸ் ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

நாமினேஷன் பட்டியல்:

பின் இன்று வழக்கம் போல் போட்டியாளர்கள் தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கி விட்டார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும், இந்த வாரம் 2 அல்லது மூன்று பேர் எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் கண்டிப்பாக நிக்சன், அனன்யா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரால் ஓரளவுக்கு மேல் ஏற முடியாததால் மணி உதவியுடன் மீண்டும் கீழே இறங்கிவிட்டார். இதையடுத்து கூல் சுரேஷை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து அவரின் செயலை கண்டித்த பிக்பாஸ், அறிவுரை கூறினார். சிறிது நேரம் கதறி அழுத கூல் சுரேஷ், இனி இதுபோன்ற செயல்கள் செய்ய மாட்டேன் என கூறிவிட்டு சென்றார். பிக்பாஸ் வரலாற்றில் இதற்கு முன் முதல் சீசனில் பரணி இதுபோன்று சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement