பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை நெருங்கியுள்ளது. வாரங்கள் செல்ல செல்ல போட்டி மீதான விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. அதுவும் பிக் பாஸ் போட்டியாளர்கள் டாஸ்க்கிற்காக இரு அணிகளாக பிரிந்துள்ளதால் இத்தனை நாட்கள் ராசியாக இருந்த போட்டியாளர்களுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் செய்யும் அநாகரீக செயல்களால் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களான நடிகர் சென்றாயன் மற்றும் டேனி போதை பற்றி பேசிக்கொன்டது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் மிட் நயிட் மசாலா வீடியோவில் டேனி மற்றும் சென்றாயன் குளியலறையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சென்றாயன் மௌத் வாஷை வைத்து வாய் கோப்பிலுத்து கொண்டிருக்கிறார். அப்போது டேனியிடன் ஏன்டா.. அதை குடிச்சா போதை ஏறுமா?” என்று வினாவுகிறார்.
அதற்கு டேனி ‘அப்படி தான் சொல்றாங்க, அது எந்த அளவுக்கு உண்மை தெரியல’ என்று கூற, அதற்கு சென்றாயன் ‘: அதெல்லம் கண்டுபிடிச்சிருப்பாய்ங்க டா. கேடிங்க டா. அப்புறம் ஏன் அவன் அடிக்கடி குடிக்கிறான்?’ என்று யாரையோ குறிப்பிட்டு கூறுகிறார். சென்றாயன் குறிப்பிடும் அந்த நபர் யார் என்று தெரியவில்லை.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத், பொன்னம்மபலம் போன்ற சில போட்டியாளர்கள் ரகசியமா புகை பிடிக்கின்றனர், அவர்கள் அடிக்கடி ஸ்மோக்கிங் அறைக்கும் சென்று வருகின்றனர் . அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது இல்லை. ஆனால், தற்போது போதைக்காக சிலர் மௌத் வாசை பயன்படுத்துகின்றனறா என்ற சாந்தேகமும் எழுந்துள்ளது.