தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான சீரியலில் ஒன்று கிழக்கு வாசல். இந்த சீரியலை ராதிகா சரத்குமார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கிழக்கு வாசல் சீரியலில் ரேஷ்மா, எஸ் ஏ சந்திரசேகர், ரேஷ்மா, தினேஷ், அருண் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், இந்த சீரியலில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் தினேஷ் நடித்திருந்தார். சின்னத்திரை சீரியலின் மூலம் தான் தினேஷ் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்குப்பின் நாச்சியாபுரம் என்ற சீரியலில் நடித்திருந்தார். பின் இவர் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே 2 சீரியலிலும் நடித்திருந்தார்.
அதனை அடுத்து இவர் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருந்தார். இதனிடையே இவர் சீரியல் நடிகை ரக்ஷிதாவை திருமணம் செய்து கொண்டார். நன்றாக தான் இவர்கள் திருமணம் வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. பின் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள்.
பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:
இப்படி இருக்கும் நிலையில் தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக தினேஷ் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்களை செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்ற இரண்டு வீடுகள் இருக்கிறது. போட்டியாளர்களும் முதல் நாளில் இருந்தே அனல் பறக்க விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிழக்கு வாசல் சீரியல் :
தினேஷ் நிகழ்ச்சியில் நுழைந்திருந்தே சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் கிடைத்து வருகிறது. கடந்த வாரம் தினேஷ் கேப்டனாக இருந்தபோது நன்றாக செய்திருந்தார் என்று பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தினேஷ் நடித்திருந்த கிழக்கு வாசல் சீரியல் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாற்றப்பட்ட கதாபாத்திரம் :
அதாவது, தற்போது தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் கிழக்கு வாசல் சீரியலில் அவர் நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை கமிட் செய்திருக்கிறார்கள். அவரும் விஜய் டிவியில் நிறைய சீரியலில் நடித்து இருக்கிறார். தற்போது கிழக்கு வாசல் சீரியலில் அவர் என்ட்ரி கொடுக்கும் காட்சி இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.