டபுள் ஏவிக்ஷன், கமல் சொன்னது போல இன்று வெளியேறியது இவர் தான் – அன்பு கேங்கிற்கு முதல் ஆப்பு.

0
35646
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 66 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இதுவரை மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதை விட சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இன்னும் 12 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. 10 வாரங்களை நிறைவு செய்ய இருந்தாலும் இன்னும் 12 பேர் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-65-710x1024.jpg

எனவே, இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட இருக்கின்றனர் இதனை இன்று வெளியான ப்ரோமோவில் உறுதி செய்து இருந்தார் கமல். இந்தவார நோமினேஷனில் அர்ச்சனா, ஆரி, பாலாஜி, நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் போட்டியாளர்கள் 1-ல் இருந்து 13 வரை தங்களை வரிசைப்படுத்திக்கொள்ளுமாறு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடத்தில் வந்த ஆரி, பாலாஜி, அர்ச்சனா ஆகிய மூவரும் இந்த வாரம் தங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது நாமினேட் செய்யலாம் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

இதையும் பாருங்க : வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – காரணம் இதான்.

- Advertisement -

இந்த மூவரில் பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார். ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா, சோம் சேகரையும் நாமினேட் செய்தார். இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் இன்று டபுள் எவிக்ஷன் என்று அறிவித்த கமல் இன்று ஒருவரவும் நாளை ஒருவரும் வெளியேற்றப்படுவார் என்று அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாக நம்பகரமான தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நாளை நிகழ்ச்சியில் நிஷா வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement