ஒருவரை ஸ்டோர் ரூமிற்கும் ஒருத்தரை கன்பெஷன் ரூமிற்கும் அனுப்பிய கமல் – யார் யார்னு பாருங்க.

0
857
kamal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 66 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இதுவரை மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதை விட சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இன்னும் 12 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது

அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த டாஸ்கிங் போது நிஷா மற்றும் அர்ச்சனா போட்ட சென்டிமென்ட் டிராமா ரசிகர்களை கடுப்பாகியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த டாஸ்க் நடந்து முடிந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் வாரத்தில் சிறந்த போட்டியாளர் மற்றும் சுவாரசியம் குறைவான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் அனிதா மற்றும் ரமேஷ் போரிங் பர்பார்மாறாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா, ரியோவை கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் ரியோ.

அதே போல நேற்றைய நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான கேப்டன் பதிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த டாஸ்கில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார் பாலாஜி. இதனால் ரம்யா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாரம் டபுள் ஏவிக்ஸின் என்று கமல் உறுதி செய்து இருந்தார். தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் சோம் சேகரை ஸ்டோர் ரூமிற்கு, ஜித்தன் ரமேஷை கனபெஷன் ரூமிற்கு அனுப்பி உள்ள கமல் அதில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement