பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் “குறும்படம்”..! சிக்கிய போட்டியாளர் யார் தெரியுமா..? ஆதாரம் இதோ..!

0
866

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி எலிமினேஷன் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த போட்டியில் இருந்து வெளியரப்போவது யார் என்ற பதட்டம் ஒருபக்கம் இருக்க இந்த வாரம் கமல் ஏதேனும் ஒரு போட்டியாளர்களுக்கு குறும் படம் ஒன்றை போட்டு காண்பிப்பாரா? அது யாராக இருக்கும் ?

bigg boss

கடந்த ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் படு பெமஸ். அதிலும் சென்ற சீசனில் போட்டியாளராக பங்குபெற்ற ஜூலி , அவருடைய குறும்படத்தை மறந்திருக்க மாட்டார். இந்நிலையில் தற்போது இந்த வாரம் குறும்படம் ஒளிபரப்பாகும் பட்சத்தில் அது வைஷ்ணவி சம்மந்தப்பட்டதாக தான் இருக்கும்.

ஏனெனில், அவர் தான் பிக் பாஸ் வீட்டினுள் மாறி, மாறி பேசி சில சக போட்டியாளர்களிடமும் கெட்ட பெயரை எடுத்துள்ளார். இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் முதலாளி மற்றும் பணியாட்கள் என்ற டாஸ்க் தான் ஓடிக்கொண்டிருந்தது. இதில் பெண்கள் பணிப்பெண்ணாக இருந்த போது நடிகை மும்தாஜ் , தான் புடவை அணிந்து தூங்கமாட்டேன் அது எனக்கு அசவ்கரியமாக இருக்கிறது என்று பிரசச்னை செய்தார்.

Vaishnavi

இதனால் டாஸ்கின் போது இரண்டு மணி நேரம் தாமதமும் ஆனது. மும்தாஜ் இப்படி செய்ததற்கு வைஷ்ணவி, சக போட்டியாளர்களிடம் “மும்தாஜ் புடவை கட்டிக்கொண்டு தூங்க மாட்டேன் என்று ஓவராக சீன் போடுகிறார். சினிமாவில் “மல மல பாடலுக்கெல்லாம் கவர்ச்சி நடனம் ஆடும்போதெல்லாம் தெரியவில்லையா” என்பது போல கூறி இருந்தார்.

ஆனால், நேற்று(ஜூன் 29) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மும்தாஜிடம் பேசிக்கொண்டிருந்த வைஷ்னவி ‘ உங்களை சில பேர் மல மல பாட்டுக்கு ஆடும்போது தெரியவில்லையா, இப்போது மட்டும் புடவை கட்டி தூங்க சீன் போடுகிறார் என்று கூறுகிறார்கள்’ என்று அப்படியே மாற்றி பேசியுள்ளார். இதனால் இந்த பிரச்னை நாளை குறும்படமாக பிக் பாஸின் அகம் டிவியில் ஒளிபரப்பபடலாம் என்று யூகிக்கப்படுகிறது.</strong

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க "Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.