இறந்த தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றிய ஆரவ் – என்ன தெரியுமா ?

0
1084
arav
- Advertisement -

இந்த 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக தான் இருந்து வருகிறது. அதிலும் திரைத்துறையில் இருக்கும் பல்வேறு பிரபலங்களின் மரணம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதிலும் பிக் பாஸ் போட்டியாளர்களான முகேன், லாஸ்லியாவின் தந்தை சமீபத்தில் இறந்தார்கள். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஆரவ் குடும்பத்தில் சோகம் ஏற்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொண்டார்ஆரவ். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம்கடந்த , செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல ஆரவ்வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பிந்து மாதவி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட் ராமன், ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம் சுஜா வருணி என்று பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் ஆரவ்வின் தந்தை காலமாகி இருப்பதாக ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில், இதை நான் மிகுந்த வலியோடு எழுதுகிறேன். இன்று என்னுடைய நண்பர், என் பலத்தின் தூணாக இருந்த என் தந்தை காலமானார். கடந்த இரண்டு மாதமாக அவர் பட்ட கஷ்டங்களை நாங்கள் பார்த்து தவித்தோம். எங்கள் வாழ்வில் வெற்றிடத்தை உண்டாகி விடீர்கள் அப்பா. இந்த இழப்பில் இருந்து எப்படி மீளப்போகிறேன் என்பது தெரியவில்லை. எங்கிருந்தாலும் எங்களை ஆசிர்வதியுங்கள். அப்பாவின் இறுதி சடங்குகள் அவர் ஆசைப்படி நாகர்கோவிலில் நடைபெறும் என்று உருக்கமுடம் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement