இரண்டாம் மனைவிக்கு ஏற்பட்ட தர்ம சங்கடத்தினால் தான் பிக் பாஸில் கலந்து கொண்டேன். சரவணன் ஓபன் டால்க்.

0
1411
saravanan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஆண்டு பல்வேறு அமுலி துமுளிகளுடன் நிறைவடைந்தது .பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றம் தான் மிகவும் ரகசியமாக இன்னும் இருந்து வந்தது.இதில் சரவணனின் வெளியேற்றம் தான் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.ஒரு எபிசோடில் கமலிடம், சிறு வயதில் தானும் பேருந்தில் பெண்களை உரசி இருக்கிறேன் என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is SARAVANAN-WIFE-1024x576.jpg

ஒரு தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சரவணன் எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார் பிக் பாஸ்.இருப்பினும் மன்னிப்பு கேட்ட பின் சிறிது நாட்கள் கழித்து சரவணனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமான வெளியேற்றினார்கள். சரவணன் மன்னிப்பு கேட்டும் ஏன் அவரை வெளியிற்றினார்கள் என்று பலரும் கேள்விகளை கேட்க துவங்கினார்கள்.பிக் பாஸ் வீட்டில் சரவணன் இருக்கும் போது ஒரு டாஸ்கில், தனது மனைவி மற்றும் மகன் குறித்து பேசி இருந்தார் சரவணன்.

இதையும் பாருங்க : முதன் முறையாக நீச்சல் உடையில் வேதிகா கொடுத்த போஸ் – வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

அதில், முதல் மனைவி இருக்கும் போது வாரிசுக்காக, தன்னை ஆண்மகன் என்று நிரூபிப்பதற்காக 2ஆவது திருமணம் செய்து கொண்டு தன்னை ஆம்பளைன்னு நிரூபிச்சுட்டேன்னு மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணன், பிக் பாஸில் கலந்து கொண்ட காரணத்தை கூறி இருந்தார். அதில் பேசிய அவர், நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு நிர்பந்தத்தினால் தான் போனேன்.

வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும்

என்னுடைய இரண்டாம் மாணவி கர்ப்பமாக இருந்த போது மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அப்போது அவரைப் பார்த்த ஒருவர் யார் உங்கள் மகளா? என்று கேட்டார் அதிலிருந்து நான் அவளை வெளியில் கூட்டிச் செல்வதே கிடையாது. அவளும் இது குறித்து என்னிடம் கேட்டபோது உன்னைப்பற்றி செல்வதற்கான ஒரு தருணம் வரும்போது சொல்கிறேன் என்றேன். மேலும் எனக்கு இரண்டு மனைவி வைக்கிறது ஒரு குழந்தை இருக்கிறது என்பதை சொல்வதற்கான ஒரு தளமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement