கமலை எடுத்துட்டு இவரை போடுங்க.! ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பிய ரசிகர்கள்.!

0
4842
kamal
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

சிக்கன், கேக், தூக்கம் இதை தவிர போட்டியாளர்களுக்கு எதுவும் தெரிவதுமில்லை. அதே போல இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமலும், ஏதோ பிக் பாஸ் நிறுவனம் கொடுக்கும் அறிவுரைகளின்படி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் அப்பட்டமாக தெரிந்து வருகிறது. இதனால் இந்த சீசன் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் தெலுங்கு பிக் பாஸ்ஸில் நடிகர் நாகர்ஜுனா கமலை விட சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்று தமிழ் ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே இந்த சீசன் கடந்த இரண்டு சீசன்களை விட மிகவும் போராக போய் கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

அதே போல கமலின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமும் கடந்த இரண்டு சீஸனை போல இல்லை என்றும் எனவே, கமலை எடுத்துவிட்டு நாகர்ஜூனாவை ஒரு ஒரு வாரம் தொகுத்து வழங்க செய்யுங்கள் என்றும் ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை சிம்பு தொகுத்து வழங்க போவதாக ஒரு தகவல் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement