துவங்கியது இந்த வார நாமினேஷன். ஆரியை யாரெல்லாம் நாமினேட் செய்துள்ளார்கள் பாருங்க.

0
1803
aari

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமான நான்கு வாரத்தை நிறைவு செய்து நிறைவு செய்ய இருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் அன்பு, சண்டை, கொஞ்சம் ரொமான்ஸ், புது புது உறவுகள் பல பஞ்சாயத்துக்கள் அரங்கேறி இருந்தது. நாளுக்கு நாள் பிக் பாஸின் சுவாரசியம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஷிவானி, அர்ச்சனா, ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகிய 5 பெயரை தவிர பாலாஜி, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, வேல் முருகன், சுரேஷ், அனிதா, ஜித்தன் ரமேஷ், ஆஜித்,சனம் ஆகிய 11 பேரும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தனர்.

இதில் வேல்முருகன் வெளியேற்ற பட்டு இருந்தார். இதுவரை ரேகா மற்றும் வேல்முருகன் என்று இரண்டு பேர் வெளியாகி இருந்தனர். மேலும், பிரபல தொகுப்பிளனியான அர்ச்சனா முதல் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் கலந்து கொண்டதிலில் இருந்து பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் சுவாரசியம் ஏற்பட்டது. இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக சுச்சித்ரா கலந்து கொண்டு உள்ளார்.

- Advertisement -

பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார் ஆனால் இவர் மிகப்பெரிய பிரபலமடைந்தது என்னவோ சுச்சிலீக்ஸ் மூலம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் எண்ணற்ற பிரபலங்களின் ஆபாச படங்களை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் சுசித்ரா. ஆனால் இது குறித்து விளக்கமளித்த அவர் தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் தான் எந்த பிரபலங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட இல்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் சுசித்ரா.

சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த சுச்சத்ரா பிக் பாஸில் கலந்து கொண்டு இருப்பதால் பிக் பாஸ் வீட்டில் கண்டிப்பாக எதாவது சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கிவிட்டது. அதில், ஆரி சொன்னது போல பெரும்பாலோனோர் அவரை நாமினேட் செய்துள்ளனர். அதே போல சுச்சத்ரா, அர்ச்சனாவை நாமினேட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement