பாராட்டு மழையில் கேபி, ரியோ ஆடியது என்ன ? ரியோவை வச்சி செய்யும் நெட்டிசன்கள். காரணம் இதான்.

0
9609
gabe
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.

இதையும் பாருங்க : அட, ரம்யா பாண்டியனின் அக்காவும் நடிகை தானா. அதுவும் இந்த பிக் பாஸ் பிரபலத்தோடு நடிச்சிருக்காங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்று (ஜனவரி 14) கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். ஆனால், கேப்ரில்லா பேட்டியை எடுத்தவுடன் ரியோ வந்து நான் எடுப்பதாக இருந்தேன் நீ ஏன் எடுத்த என்று கூறினார். அதே போல நீ ஏன் போக வேண்டும் என்று கேபி கேட்டதற்கு, எனக்கு என் பொண்ண பாக்கணும், என்னிடம் ஹாப்பி பொங்கல் சொல்லிவிட்டு அந்த பெட்டியை என்னிடம் கொடுத்துவிடு என்ற. அதற்கு கேபியோ, நீ போகணும்னா நீ எடுத்திருப்ப இல்ல என்று கேபி கேட்க, நான் ரெடியா தான் இருந்தேன் என்று ரியோ கூறினார்.

ஆனால், இறுதி வரை கேபி தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாமல் தான் இருந்தார். இருப்பினும் இறுதி வரை ரியோ, எனக்கு வீட்டுக்கு போகணும் என்று கூறிக்கொண்டே இருந்தார்.நீ போனா உங்க அம்மாவ மட்டும் தான் பாக்கணும் ஆனால், நான் நிறைய பேர பாக்கணும் என்று ரியோ கூற, அதற்கு கேபி எனக்கு அம்மா மட்டும் தானடா இருக்காங்க என்று உருக்கத்தோடு கண் கலங்கினார்.

-விளம்பரம்-

கேப்ரில்லாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி வரும் நிலையில் ரியோ, கேபி எடுத்த பின்னர் தான் செல்ல வேண்டும் என்று சொன்னது நாடகம் போல இருக்கிறது என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல கேப்ரில்லாவின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

Advertisement