சீரியல் நடிகை நிஷா- கணேஷ் தம்பதியருக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக கணேஷ் மற்றும் நிஷா திகழ்வது அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லத்தரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளியான இருந்தார்.
பிறகு தான் நிஷா சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, தலையனை பூக்கள், மஹாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நிஷா நடித்து இருக்கிறார்.அதுமட்டும் இல்லாமல் நிஷா படங்களில் கூட நடித்து இருக்கிறார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட்டின் மனைவி என்பது குறிப்பித்தக்கது. கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
நிஷா- கணேஷ் திருமணம்::
அதன் சினிமா உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதனிடையே நிஷா- கனேஷ் இருவரும் காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சமைரா என்ற மகளும் இருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகு நிஷா நடிப்பில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.
நிஷா குறித்த தகவல்:
இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கழித்து தான் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மேலும், நடிகை நிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் MY3 வெப் சீரிஸில் நிஷா நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்தபடம் வெளியாகி இருக்கிறது.,
மீண்டும் கர்ப்பமான நிஷா:
அதே போல இவர் சின்னத்திரையில் செம்பருத்தி தொடரிலும் நடித்து இருந்தார். அதற்கு பின் நிஷாவை வேறு எந்த தொடரிலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை நிஷா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். இதற்கு பலருமே வாழ்த்து அறிவித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த போட்டோ சூட் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.
நிஷா கணேஷ் தம்பதி குழந்தை:
இந்த நிலையில் நிஷா- கணேஷ் தம்பதியத்திற்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இது தொடர்பாக கணேஷ் சோசியல் மீடியாவில் குழந்தை உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தாய், சேய் இருவரும் நலமாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.