பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜிபி முத்து. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார் ஜி பி முத்து. இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.
அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் இவரது வேகமாக வளரும் யூடுயூப் சேனல். மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:
அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். அதோடு இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது.
ஜிபி முத்து நடித்த படம்:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பிருந்ததை விட அதிகமாக ஜிபி முத்துவிற்கு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது . இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு ஜி பி முத்து சன்னி லியோனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தார். இவர் சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில்நடித்து இருந்தார். காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.
குவியும் பட வாய்ப்புகள் :
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு ஜிபி முத்துக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட நிகழ்ச்சியிலும் ஜி.பி. முத்து கலந்துகொண்டு இருந்தார் . அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக ஜிபி முத்து பங்கேற்று வந்தார்.
ஆனால், இடையில் இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில வாரங்களாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் வரவில்லை. இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்து தனது தந்தைக்கு புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை தனது யூடுயூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.