பாதிக்கப்பட்டவரை குறை சொல்வது எல்லாம் – பெண்கள் குறித்து கமல் கூறிய கருத்திற்கு சின்மயி காட்டம்.

0
1134
chinmayi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

-விளம்பரம்-

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததால் சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியையும் இழந்தார். அதே போல சின்மயின் குற்றச்சாட்டால் தான் வைரமுத்து, மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் நியாயம் ஜெயித்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருந்தார். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சின்மயி சமீபத்தில் கமல் பற்றி சர்ச்சை ஒன்றை எழுப்பியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் ட்விட்டர் வாசி ஒருவர் கமல், பெண்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்றை பதிவிருந்தார். அதில், பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி என்ற கேள்விக்கு கமல் அளித்த பதில் எனக்கு மட்டும்தான் நெருடலா இருக்குதா?”உங்கள் மனசு சுத்தமாக இருக்கும் பட்சத்தில் கிட்ட யாரும் வரமாட்டாங்க”ன்னு சொல்றது என்ன மாதிரியான புரிதல்? என்று பதிவிட்டு கமல் பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள கமல், ஒரு பெண் ரோட்டில் சென்றால் அதனை ஈடு செய்வதற்கு என்று பவுடர் எல்லாம் போட்டுக்கொண்டு போது 5 பேர் நிற்பார்கள். ஆனால், உண்மையில் ஒரு நல்ல பெண் போச்சின்னா கிண்டல் செய்பவர்களே, டேய் விடுடா அந்த பொண்ணு பாவம்னு சொல்வார்கள். ஆனால், அதே ஒரு பெண் வாயை கோணி ‘த்து’ என்று துப்பினால் அந்த பெண்ணை விடாமல் துரத்துவார்கள். ஏனென்றால் அதுதான் சிக்னல். கல்லெடுத்து அடிப்பேன் என்று சொன்னால் கையை பிடிப்பார்கள். இதையெல்லாம் ஆண்கள் ஒரு சிக்னலாக எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் கண்ணியம் தவறாமல் சென்றீர்கள் என்றால் அவர்களே வெட்கப்படுகிறார்கள் என்று கமல் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த வீடியோவிற்கு கமன்ட் செய்துள்ள சின்மயி, மனசு சுத்தமா இருந்தா யாரும் வரமாட்டாங்க என்று சொல்வது எல்லாம் பாதிக்கப்படுவோரையே குறை சொல்வது போன்றது என்று பதிவிடுள்ளார். ஆனால், சின்மயின் இந்த கருத்திற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த கேள்விக்கு கமல் சொன்ன பதிலை முழுசா கேளுங்க… பசங்க பண்ற பொறுக்கித்தனமான attitude தப்புனு தான் சொல்லிருக்கார் என்று அந்த பேட்டியின் முழு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement