இன்னிக்கி ஜெயிலில் இது தான் தண்டனையா.! மீண்டும் வெச்சி செய்யப்போகும் பிக் பாஸ்.!

0
3260
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க லக்சரி பட்ஜட்டிற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த வாரம் டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த போது பெரும்பாலானோர் சேரன், ரஜினி போல செய்யவில்லை என்று கூறினார் சரவணன் ஆனால், அதை சேரன் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பிரச்சனை பயங்கரமாக வெடித்தது.

-விளம்பரம்-

அதன் பின்னர் லாஸ்லியா தன்னுடைய பெயரை செல்ப் நாமினேஷன் கூறி நான் ஜெயிலுக்கு செல்கிறேன் என்று கூறினார். அதன் பின்னர் இறுதியாக லாஸ்லியா மற்றும் ஷெரின் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், முதல் முறை ஜெயிலுக்கு போகும் போது சந்தோஷமாக சென்ற லாஸ்லியா, நேற்று மிகவும் கவலையோடு என்றார்.

இதையும் பாருங்க : லாஸ்லியா ஜெயிலுக்கு போனதுக்கு காரணம் இது தான்.! வறுத்தெடுத்த வனிதா.! 

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே, கடந்த வாரம் லாஸ்லியா மற்றும் அபிராமியை பிக் பாஸ் வெச்சு செய்தார். அதன் பின்னர் தான் ஜெயிலின் கடினத்தன்மை மற்ற போட்டியாளர்களுக்கும் புரிய வந்தது. இந்த நிலையில் இந்த முறை என்ன தண்டனை தர போகிறாறோ என்று ஷெரின் மற்றும் லாஸ்லியா கடும் பீதியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் உரலில் மாவு அறைக்கும் தண்டனை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு சான்றாக நேற்று ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் பிக் பாஸ் சிறையில் உரல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் வெச்சி செய்ய போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement