லாஸ்லியா ஜெயிலுக்கு போனதுக்கு காரணம் இது தான்.! வறுத்தெடுத்த வனிதா.!

0
4842
losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது. அவருக்கு பின்னர் மீரா ஓரளவிற்கு கண்டன்ட் கொடுத்து வந்தார், தற்போது அவரும் வெளியேறிவிட்டார். இருப்பினும் வெளியே சென்றாலும் வனிதா அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி உரித்து ட்வீட் செய்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அனைவரையும் அழைத்து பேசிய லாஸ்லியா, இது அனைத்துக்கும் காரணம், சாக்க்ஷி பட்டதற்கும் நான் தான் காரணம். இனி யாரும் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

இதையும் பாருங்க : எனக்கு இந்த மாதிரி ரோல் கூட ஓகே.! எனக்கு உதவி செய்யுங்க.! வீடியோவை வெளியிட்ட நடிகை.! 

- Advertisement -

அது மட்டுமின்றி இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த போது சேரன் மற்றும் சரவணனுக்கு பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் இறுதியாக லாஸ்லியா மற்றும் ஷெரின் மோசமாக விளையாடியவர்கள் என்று தேர்வு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டனர்.

இந்த நிலையில் சாக்க்ஷி விஷயத்திலும், சிறைக்கு செல்லும் விஷயத்திலும் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தை பற்றி வனிதா ட்வீட் செய்துள்ளார் அதில், லாஸ்லியா ஒரு சுயநலவாதி, அவர் தன்னை யாரும் பழி சொல்ல கூடாது என்பதற்காக தான் சிறைக்கு போனால். ,மேலும், சாக்க்ஷி குறித்து இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால், லாஸ்லியா நல்லா தந்திரமாக விளையாடுகிறார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement