குயின்சியின் காலிலும் விழுந்து பொருளையும் போட்டு உடைத்த ஜனனி – ஒரு துண்டுக்கா இவ்ளோ பெரிய சண்டை. வைரலாகும் வீடியோ

0
403
janany
- Advertisement -

குயின்சி உடன் ஏற்பட்ட விவாதத்தில் புயலாய் மாறி கோபத்தில் ஜனனி பொருளை கீழே போட்டு உடைத்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

பின் வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் கடந்த வாரம் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார்.

நான்காவது வாரம் டாஸ்க்:

தற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இதில் அந்த டிவி – இந்த டிவி என்ற டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். வழக்கம்போல் இரு அணிகளுக்கும் இடையில் கலவரம் தொடங்கியிருந்தது. இந்த வாரம் ஆயிஷா வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குயின்சி உடன் ஏற்பட்ட விவாதத்தில் புயலாய் மாறி கோபத்தில் ஜனனி பொருளை கீழே போட்டு உடைத்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஜனனி- குயின்சி சண்டை:

இந்த நிகழ்ச்சியில் பரிச்சயம் இல்லாத நபராக ஜனனி பங்கு பெற்றிருக்கிறார். இவர் இலங்கை தமிழ் பெண். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ஜனனிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அதோடு இவர் சிறப்பாகவும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் குயின்சிக்கும் ஜனனிக்கும் வீட்டில் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால், ஜனனி, குயின்சி உடைய துண்டை பயன்படுத்தி இருக்கிறார். இதை பார்த்த குயின்சி, நீங்கள் ஏன் என்னுடைய துணியை பயன்படுத்தினீர்கள்? என்று கேட்டவுடன் நான் தெரியாமல் எடுத்து விட்டேன் சாரி என்று ஜனனி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கோபத்தின் உச்சியில் ஜனனி:

பின் இது பிற போட்டியாளர்கள் இடம் சென்று பெரிய விவாதமாகவே மாறியது. இதனால் ஜனனி, குயின்சி இருவருக்கும் இடையே பெரிய சண்டையாக மாறியது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஜனனி கையில் இருந்த கப்பை கீழே போட்டு உடைத்திருக்கிறார். பிறப்போட்டியாளர்களும் இவர்களை மாற்றி மாற்றி சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement